மசாஜ் சென்டரா? ‘மஜா’ சென்டரா? மாணவ, மாணவிகள் சிக்கும் அபாயம்

கடந்த சில நாட்களாக வாட்ஸப்பில் ஒரு நோட்டீஸ் படம் வைரலாக பரவிக்கொண்டிருப்பதை கவனித்தீர்களா? கரூர் முகவரியில் ஒரு மசாஜ் சென்டர்  விளம்பரம் வருகிறது.
 
அதில், ‘ஒரு பெண்ணுக்கு இரு ஆண்கள், ஒரு ஆணுக்கு இரு பெண்கள் புல் பாடி மசாஜ், முழுமையாக சந்தோஷம்(?!?)  கிடைக்கும் வரை செய்யப்படும்’ என குறிப்பிட்டிருந்தது. இப்படி ஒரு சென்டர் இருக்கிறதா, இல்லையா என்ற பிரச்னை ஒருபுறம் இருந்தாலும், மசாஜ்  கலை ஒரு மன்மதக்கலையாக மாறி வருவது மறுப்பதற்கில்லை.

மசாஜ் வரலாற்றை சற்றே பின்னோக்கி பார்த்தால் வெளிநாட்டு கடற்கரையில்  இருந்தே இது துவங்கியிருக்கிறது. ‘சன் பாத்’ எடுத்துக்கொண்டே கடற்கரை மணலில் படுத்து, இதமான சூட்டில் உடலுக்கு ஆலிவ் ஆயில் உள்ளிட்ட  பூக்கள், விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்களை தடவிக்கொண்டு, தசைகளை பிடித்து விடும்போது தூக்கம் கூட வந்து விடும்.

பின்னர்  இவை பரவலாக எல்லா நாடுகளுக்கும் பரவத்தொடங்கி விட்டது. தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும்பாலானோர்  சுற்றுலாப்பயணம் செய்வதற்கு மசாஜூம் காரணம். செக்ஸி மசாஜ் என்ற பெயரில் மசாஜ் சென்டர்கள் நடத்துகின்றனர்.

ஆண்களுக்கு பெண்கள், பெண்களுக்கு ஆண்கள் என்று தனித்தனி பிரிவு உள்ளதாம். 75 சதவீதம் பெண்கள்தான். இதில் ஒரு விசேஷம்  என்னவென்றால், குடும்ப பெண்கள் கூட பகுதிநேரமாக இத்தொழிலில் ஆர்வமாக ஈடுபடுகின்றனராம். தாய்லாந்து நாட்டில் விபசாரத்தை அரசே  ஊக்குவிப்பது கூடுதல் பிளஸ்.

உச்சி முடி முதல் உள்ளங்கால் வரை பல்வேறு தெரபிகள் முறையில் மசாஜ் செய்யப்படுகிறது. இதிலும், முதல்  வகுப்பு, 2ம் வகுப்பு, 3ம் வகுப்பு என மசாஜ் பயிற்சியாளர்கள்(!?!) தரம் பிரிக்கப்படுகின்றனர். நம்பர் ஒன் பயிற்சியாளர் அது ஆணோ, பெண்ணோ சுமார்  ஒரு ஆண்டு வரை அட்வான்ஸ் புக்கிங் செய்யப்படுவதும் உண்டாம்.

மனிதர்களை மட்டுமல்ல... மலைப்பாம்பு, நத்தைகளை கூட மசாஜ் வித்தைக்கு  பயன்படுத்துகின்றனர். வெளிநாடுகளில் பரவி வந்த இந்த மசாஜ் கலாசாரம் சென்னையில் கடந்த 70களிலேயே துவங்கி விட்டது. நகருக்கு ஒன்று,  தெருவுக்கு ஒன்று என்று சர்வசாதாரணமாக கிளம்பி விட்டன.

அப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் இங்கு சென்றபோதுதான், விபரீதம் தெரிந்து தடை செய்யப்பட்டது. பின்னர் வழக்கம்போல இப்பிரச்னை  அமுங்கியதும், மீண்டும் காளான்கள் போல முளைக்கத் தொடங்கி விட்டன.

சென்னையில் மட்டும் அங்கீகாரத்துடன் சுமார் 100 சென்டர்கள்,  அங்கீகாரமின்றி 500க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் இயங்குவதாக இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன. பப்புகள், பார்கள், ஹெல்த் கிளப்,  அரோமா தெராபி, அக்யூபிரஸ்ஸர் சென்டர், ஆயுர்வேதிக் சென்டர் என்று பல உருவங்களில் மசாஜ் சென்டர்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

வரும் கஸ்டமர்களின் முகவரி, போன் எண்களை வாங்கி வைத்துக்கொள்வது, அரைகுறை ஆடையுடன் பெண்கள், ஆண்களுக்கு மசாஜ் செய்வதை  கேமராவில் பதிவு செய்து மிரட்டுவது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் பிரபல நடிகையின் கணவர் மீது தாய்லாந்து நாட்டு பெண்கள், மசாஜ் கிளப்பில் வேலை  தருவதாகவும், மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் தருவதாகவும் கூறி விபசாரத்தில் தள்ள முயற்சித்ததாக பரபரப்பு புகாரை கூறினர்.

பிரச்னை முடிவுக்கு  வந்து, அவர்கள் பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு சொந்த நாட்டுக்கு செல்வதற்குள், நாக்கு தள்ளி விட்டது. சென்னையில் பிலிப்பைன்ஸ், மலேசியா  உள்ளிட்ட நாடுகள் மற்றும் வடஇந்திய பெண்களை அழைத்து வந்து மசாஜ் சென்டர் என்ற பெயரில், ‘மாடர்ன் விபசாரம்’ கொடி கட்டி பறக்கிறது.

பணக்கார கல்லூரி மாணவ, மாணவிகளை தங்கள், பிடியில் சிக்க வைத்துக்கொண்டு மிரட்டி பணம் பறிப்பதும் தொடர்கதையாக உள்ளது. இதில்  அவ்வப்போது ஏராளமானோர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.

கோவையில் ஒரு மசாஜ் சென்டருக்கு, அடிக்கடி கல்லூரி மாணவர்கள் வந்து செல்வது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில்  அங்கு விபசாரம் நடப்பது தெரிய வர, கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர். மசாஜ் சென்டர் உரிமையாளர் கைதானார். இதேபோல  நாகாலாந்து பெண்களை வைத்து மசாஜ் சென்டர் நடத்தியவர்களும் கைதாயினர்.

பாருக்குள்ளே..

மதுரை அண்ணா நகர் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்கள் மற்றும் பலரை சீரழிப்பதாக சமீபத்தில் கமிஷனர் சைலேஷ்குமார்  யாதவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதே பகுதியில் உள்ள ஒரு பாரில் வரும் ‘குடிமகன்களிடம்’, பெண்கள் மசாஜ் என்று அழைத்து ஒரு  பெருந்தொகையை கறந்துவிடுகின்றனர். விருப்பத்திற்கு தகுந்த வகையில் ரேட் உண்டு. இதற்கென மசாஜ் சென்டர்கள், பார்களுக்கு புரோக்கர்கள்  உள்ளனர்.

இவர்களிடம் ரேட்டை சொன்னால் போதும். அதற்கேற்ப உங்களுக்கு ஒரு ‘தற்காலிக துணையை’ ஏற்பாடு செய்து தருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் தற்போது ‘மாடர்ன் விபசார’ மசாஜ் சென்டர்கள் மளமளவென பெருகி  விட்டன.

இதுதொடர்பாக போலீசாருக்கு புகார்கள் வந்தாலும் பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. விஐபிக்களின் தலையீடும் இதற்கு முக்கிய  காரணமாக கூறப்படுகிறது. உடல் சுகத்துக்கு ஆசைப்பட்டு காலம் முழுவதும், காசை செலவழித்து சிக்கி தவிப்பவர்களும் இதில் அதிகளவு உள்ளனர்.

கை நிறைய சம்பளம், உணவு, தங்குமிடம் உண்டு என்ற ஆசை காட்டி அழைத்து வரப்படும் பெண்களும் சீரழிக்கப்படுகின்றனர். எனவே, போலீசார்  இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை காட்டி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

ஸ்பெஷல் ஸ்டோரி

தமிழகமெங்கும் பெரும்பாலான மசாஜ் சென்டர்கள் எல்லாம் ‘மஜா’ சென்டராக மாறிக் கொண்டிருக்கின்றன. மசாஜ் கலையில் கைதேர்ந்த வெளிநாட்டு  இளம்பெண்களை வரவழைத்து, மாடர்ன் விபசாரம் சப்தமின்றி அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

மசாஜ் சென்டர்களில் சென்னை, மதுரை உள்ளிட்ட  முக்கிய நகரங்களில் கல்லூரி மாணவ, மாணவிகளும் சிக்கிக் கொள்வதாக தகவல்கள் வெளியாகி  பரபரப்பை கிளப்பி உள்ளது.
Tags:
Privacy and cookie settings