2015-ம் ஆண்டிற்கான உலக அளவில் தலைசிறந்த 500 மிகப்பெரிய நிறுவனங்களி்ன் பட்டியலை பார்ச்சூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவை சேர்ந்த ஏழு நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
அந்த நிறுவனங்களின் விபரம் பின்வருமாறு:-
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (119-வது இடம்) (74 பில்லியன் டாலர் வருமானம்), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (158-வது இடம்) (62 பில்லியன் டாலர் வருமானம்),
டாடா மோட்டார்ஸ் (254-வது இடம்) (42 பில்லியன் டாலர் வருமானம்), ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (260-வது இடம்) (42 பில்லியன் டாலர் வருமானம்),
டாடா மோட்டார்ஸ் (254-வது இடம்) (42 பில்லியன் டாலர் வருமானம்), ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (260-வது இடம்) (42 பில்லியன் டாலர் வருமானம்),
பாரத் பெட்ரோலியம் (280-வது இடம்) (40 பில்லியன் டாலர் வருமானம்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (35 பில்லியன் டாலர் வருமானம்), ஓ.என்.ஜி.சி (449-வது இடம்) (26 பில்லியன் டாலர் வருமானம்).
இந்த 500 நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தை வால்மார்ட் நிறுவனம் தக்க வைத்துள்ளது.
இரண்டாவது இடத்தை சீனாவின் பெட்ரோலிய தயாரிப்பு நிறுவனம் சினோபெக் குழுமமும்,3-வது இடத்தை நெதர்லாந்தின் ராயல்டச் செல் நிறுவனம் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் கிட்டதட்ட 100 சீன நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது. இதுதவிர ஆப்பிள் (15), ஜே.பி.மார்கன் சேஸ் (61), ஐ.பி.எம். (82), மைக்ரோசாப்ட் (95), கூகுள் (124), பெப்ஸி (141),
இண்டெல் (182), கோல்டுமென் சாக்ஸ் (278) என 128 அமெரிக்க நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன.
கடந்த நிதியாண்டில் நிறுவனங்கள் ஈட்டியுள்ள வருமானத்தின் அளவின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.