மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மறைவை யொட்டி, இந்தியர்களின் துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் விதமாக
பிரிட்டன், பூட்டான் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டின் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டுள்ளன.
அப்துல் கலாமின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
ஒபாமா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''இந்தியா- அமெரிக்கா இடையேயான வானியல் ஆராய்ச்சி ஒத்துழைப்பிற்கு கலாம் பெரும் பங்காற்றினார்" என்று புகழ்ந்துள்ளார்.
அதேப்போன்று பிரிட்டன் பிரதமர், பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்,
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியன் லூங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் கலாமுக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளனர்.
இந்நிலையில், அப்துல் கலாமின் மறைவையொட்டி, இந்தியர்களின் துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் விதமாகவும்,
கலாமுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் பிரிட்டன், பூட்டான் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டின் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டுள்ளன.