ஹஜ் பயணிகள் வசதிக்காக மதினாவில் புதிய விமான நிலையம் திறப்பு

உலகம் முழுவதும் இருந்து வரும் கோடிக்கணக்கான ஹஜ் யாத்ரீகர்கள் வசதிக்காக சவுதி அரேபியா நாட்டில் உள்ள மதினா நகரில் புதிய விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானஇஸ்லாம் மக்கள்  ஆண்டுதோறும் முஹம்மது நபியின் பிறந்த ஊரான மக்கா,

மற்றும் அவரது நினைவிடம் அமைந்துள்ள மதினா நகரங்களுக்கு புனித யாத்திரை செல்கின்றனர். இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரை அடுத்த மாதம் துவங்கவுள்ளது.
 
இதுவரை மதினா நகரில் விமான நிலையம் இல்லாத குறையை போக்க புதிய விமான நிலையத்தை கட்டவும், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தும் சவுதி அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. 

இதையடுத்து கட்டுமானப் பணிகள் நிறை வடைந்த மதினா சர்வதேச விமான நிலையத்தை சவுதி மன்னர் சல்மான் திறந்து வைத்தார்.

சுமார் 120 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டப் பட்டுள்ள இந்த விமான நிலையத்துக்கு இளவரசர் முஹம்மது பின் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டப் பட்டுள்ளது.

40 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 6 முனையங் களாக உருவாக்கப் பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் 36 லிப்ட்கள், 28 நகரும் படிக்கட்டுகள் உள்ளன.

ஆண்டு தோறும் சுமார் 80 லட்சம் பயணிகள் பயனடையும் வகையில் தற்போது திறக்கப் பட்டுள்ள இந்த விமான நிலைய வளாகத்தில் மேலும் இரண்டு இணைப்பு பகுதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் ஆண்டு தோறும் சுமார் 4 கோடி பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்து வார்கள் என எதிர்பார்க்கப் படுகின்றது. சவுதி அரேபியாவில் ஏற்கனவே 27 விமான நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings