மாறிக்கொண்டு இருக்கும் ஏவிஎம் ஸ்டுடியோ !

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான அடையாளம் ஏவிஎம் ஸ்டுடியோ. உலக உருண்டையுடன் இருக்கும் ஏவிஎம் ஸ்டுடியோவில் சினிமா, சீரியல், ரியாலிட்டி ஷோ என எல்லாவிதமான படப்பிடிப்புகளும் நடந்து வருகின்றன. 

 ஏ.வி.எம். ஸ்டூடியோவின் கட்டிடப் பணிகள். | படம்: சிறப்பு ஏற்பாடு.

தற்போது ஏவிஎம் ஸ்டுடியோ மெய்யப்ப செட்டியாரின் மகன்கள் ஏவிஎம் சரவணனுக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் சொந்தமாக உள்ளது. 

இதில், பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான பகுதிகள் மட்டும் இடிக்கப்படுகின்றன. அந்தப் பகுதியில் பாலசுப்பிரமணியன் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டலாம் என்று திட்டமிட்டுள்ளார்.

ஸ்டுடியோக்களால் வருமானம் இல்லை என்பதாலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

கோயில், பூங்கா, காவல் நிலையம், நீதிமன்றம், பேருந்து நிலையம் என்று சினிமாவுக்குத் தேவையான எல்லா செட்டும் போடுவதற்கு வசதியாக இருந்த ஏவிஎம் ஸ்டுடியோ பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வருவதால்,

இனி சின்ன பட்ஜெட்டில் சினிமா எடுப்பவர்கள் லொக்கேஷனுக்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
Tags:
Privacy and cookie settings