எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு சங்கீத சகாப்தம் என பாடகி வாணி ஜெயராம் தெரிவித்தார்.
தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு குறித்து பாடகி வாணி ஜெயராம் "எம்.எஸ்.வி ஒரு சங்கீத சகாப்தம். 1945ல் இருந்து 2015 வரை இசையில் ஒரு ராஜாங்கமே நடத்திய ஒரு மாபெரும் இசையமைப்பாளர்.
அவருடைய இசையில் நிறைய சூப்பர் ஹிட் பாடல்கள் பாட கிடைத்தது என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன். இந்த உலகம் இருக்கும் வரை எம்.எஸ்.வி அவர்களின் இசை இருக்கும்" என்று தெரிவித்தார்.