ஆபாசப்படம் எடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் அருகே தறிப்பட்டறை அதிபரின் மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை ஆபாச படம் எடுத்து மிரட்டிய தொழிலாளியை பொலிசார் கைது செய்தனர்.
சேலம் சிவதாபுரத்தை அடுத்த முருங்கப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 50). இவரது மனைவி சாந்தி (37). (இவர்கள் இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). பாலகிருஷ்ணன் தனது வீட்டின் அருகே சொந்தமாக 3 தறிப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில், கடந்த 2009–ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த சரவணன் (37) என்பவரை, தறிப்பட்டறையில் வேலை செய்வதற்காக பாலகிருஷ்ணன் சேர்த்தார்.
அவரும் தினமும் வேலைக்கு வந்து கொண்டிருந்தார். இதையடுத்து தறிப்பட்டறையில் நெசவு செய்யும் பட்டு புடவைகளை வியாபாரம் செய்வதற்காக அடிக்கடி பாலகிருஷ்ணன் வெளியூருக்கு செல்வதுண்டு.
அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பாலகிருஷ்ணனின் மனைவி சாந்தியுடன் சரவணன் நைசாக பேச்சு கொடுத்து பழக ஆரம்பித்தார். பிறகு இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஆனால் இவர்களது கள்ளத்தொடர்பு பாலகிருஷ்ணனுக்கு தெரியாமல் இருந்தது.
வியாபாரம் தொடர்பாக அவர் வெளியூர் செல்லும்போது, கள்ளக்காதல் ஜோடியான சரவணனும், சாந்தியும் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. பிறகு தான் சாந்திக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது கள்ளக்காதலனுடன் தனிமையில் சாந்தி உல்லாசம் அனுபவிக்கும்போது சரவணன், வீட்டிற்குள் மறைவான இடத்தில் தனது செல்போனை வைத்து அதில் படம் பிடித்துள்ளார்.
இதையடுத்து இவர்களது கள்ளக்காதல் விவகாரம் நாளடைவில் பாலகிருஷ்ணனுக்கு தெரியவந்தது. பின்னர், அவர் மனைவி மற்றும் சரவணனை கண்டித்துள்ளார்.
மேலும், 2011–ம் ஆண்டில் வேலையில் இருந்து சரவணனை நீக்கினார். அதைத்தொடர்ந்து கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சாந்தி பிரிந்து சென்று மேச்சேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அதன்பிறகு சரவணனை தனிமையில் சந்திப்பதை சாந்தி தவிர்த்து வந்தார். ஆனால் அவர் மீது மோகம் கொண்ட சரவணன், செல்போனில் எடுக்கப்பட்ட உல்லாச காட்சியை சாந்தியிடம் காண்பித்து அடிக்கடி மிரட்டி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, சாந்தியுடன் சரவணன் தனிமையில் இருக்கும் செல்போன் வீடியோ காட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் சில நபர்களின் செல்போன்களில் வேகமாக பரவியது.
இதை பார்த்ததும் பாலகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தனது மனைவியின் ஆபாச படம் செல்போனில் பரவியது தொடர்பாக இரும்பாலை பொலிஸ் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகார் செய்தார்.
அதன்பிறகு இந்த வழக்கு சேலம் சைபர் கிரைம் பொலிசுக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், பரபரப்பு தகவல்கள் வெளியானது.
அதாவது சரவணனின் மனைவி, ஒருநாள் தனது கணவரின் செல்போனை எடுத்து வீடியோ படம் பார்த்து கொண்டிருந்தார். அப்போது அதில் தறிப்பட்டறை உரிமையாளரின் மனைவியுடன் கணவர் தனிமையில் இருக்கும் காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இருப்பினும், அதில் இருப்பது தனது கணவர் தானா? என்பதை உறுதி செய்ய அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் காண்பித்துள்ளார். அப்போது வீடியோவில் இருப்பது சரவணன் தான் என்பது தெரியவந்தது.
பிறகு நைசாக அந்த நபர், வீடியோ காட்சியை தனது செல்போனுக்கு சரவணனின் மனைவிக்கு தெரியாமல் பதிவிறக்கம்(டவுண்லோடு) செய்து கொண்டார். பிறகு தான் அந்த வீடியோ காட்சி அப்பகுதியில் மற்ற செல்போன்களுக்கு பரவியது தெரியவந்தது.
இந்தநிலையில், தறிப்பட்டறை அதிபரின் மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை செல்போனில் படம் எடுத்து மிரட்டிய தொழிலாளி சரவணனை நேற்று சைபர் கிரைம் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், அவரிடம் இருந்து செல்போனும், அதில் இருந்த மெமரி கார்டையும் பொலிசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் முருங்கப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.