இணையம் இல்லாமல் நவீன வாழ்க்கை இனி இல்லை என்று நினைக்க துவங்கியிருக்கும் நேரத்தில், இணையம் மறைந்து போகும் நிலை வரும் என்று சொன்னால் எப்படி இருக்கும்?
நீக்கமற நிறைந்திருப்பது என்பார்களே அதே போலதான் இணையமும் ஆகிவிடும் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
முன்னணி தேடியந்திர நிறுவனமான கூகுள் நிறுவன தலைவர் எரிக் ஸ்கிமிட் தான் இவ்வாறு கூறி வியக்க வைத்திரு க்கிறார்.
ஆனால் கவலை வேண்டாம், ஸ்கிமிட் சொல்வது இணையம் இல்லாமல் போகும் என்பதல்ல, நாம் அறிந்த வகையில் இணையம் காணாமல் போய் , நாம் அதன் இருப்பை உணராத அளவுக்கு எங்கும் இணையம் வியாபித்திருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.
நீக்கமற நிறைந்திருப்பது என்பார்களே அதே போலதான் இணையமும் ஆகிவிடும் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் டாவோசில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் , ‘டிஜிட்டல் பொருளாதாரத்தின் எதிர்காலம்’ எனும் தலைப்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய கூகுள் செயல் தலைவர் எரிக் ஸ்கிமிட்டிடம் , எதிர்காலத்தில் இணையம் எப்படி இருக்கும்? என்று கேட்கப்பட்டது.
இணையம் மறைந்து போய்விடும் என்று சொல்வேன் என்று இதற்கு பதில் சொன்ன ஸ்கிமிட், மேலும் கூறுகையில், “எண்ணற்ற ஐபி முகவரிகள் உருவாகி இருக்கும்.
எண்ணற்ற சாதனங்கள், சென்சார்க்ள், நீங்கள் அணிந்திருக்கும் சாதனங்கள் என எல்லாமே அவற்றை நீங்கள் உணராத அளவுக்கு இருக்கும். இந்த சாதனங்கள் எல்லாம் உங்களுடனேயே எல்லா நேரங்களிலும் இருக்கும்.
கற்பனை செய்து பாருங்கள்… நீங்கள் ஒரு அறைக்குள் நுழைகிறீர்கள். அந்த அறை உங்களை உணர்ந்து கொள்கிறது. உங்கள் அனுமதியுடன் அறையில் உள்ள பொருட்களுடன் நீங்கள் தொடர்பு கொள் கிறீர்கள்.
இது போன்ற சூழல் தொழில்நுட்ப நிறுவனங் களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். மிகவும் பிரத்யேக மான, தனிப்பட்ட தன்மை கொண்ட சுவாரஸ் யமான உலகம் உருவா கலாம்.
இது போன்ற தொழில்நுட்ப முன்னேற்றம் புதிய அலை வேலை வாய்ப்புகளை உருவாக்கும். தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளை பறித்துவிடும் என்ற கவலையே வேண்டாம்” என்றார்.
இதே விவாதத்தில் ஃபேஸ்புக் நிறுவன தலைமை அதிகாரி ஷெரில் சாண்ட்பெர்கும் கலந்து கொண்டு பேசினார். அவரும் தொழில் நுட்பம் புதிய வேலை வாய்ப்புக்ளை உருவாக்கும் அழிக்காது என்று கூறினார்.
இணையம் மக்களின் குரலாக இருப்பதாக கூறிய அவர், வரும் காலத்தில் இணையத்தால் ,மேலும் மாற்றங்கள் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
யாஹூ நிறுவன தலைமை அதிகாரி மரிசா மெயர் பேசும் போது, தனிப்பட்ட இணையம் மேம்பட்ட தாக இருக்கும் என்றும், பயனாளிகள் தங்கள் தகவல் களை தாங்களே கட்டுப் படுத்தும் நிலை வரும் என்றும் கூறினார்