குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மறைவுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், சிறந்த விஞ்ஞான மனப்போக்குடையவராகவும், படித்த ராஜியவாதியாகவும், உண்மையான தேசப்பற்றாளராகவும், இளைஞர்களின் மனம் கவர்ந்தவராகவும் விளங்கியவர்.
அப்துல் கலாமின் திடீர் மறைவுக்கு இந்திய, தமிழக மக்களுடன் இணைந்து நானும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.