உலகின் அதிக உடல் எடையுடைய இளம்பெண் அறுவை சிகிச்சை மூலம் தன் எடையை குறைத்த பின்னரும் இவரது உடல் எடை மீண்டும் அதிகரித்துள்ளது.
பிரிட்டனை சேர்ந்த ஜார்ஜியா டேவிஸ் என்பவர் உலகின் அதிக உடல் எடையுடைய இளம் பெண்ணாக கருதப்படுகிறார். டேவிசின் உடல் எடை நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் 95 கிலோவாக இருந்தது.
திடீரென, இவரது உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு முன்னர் இவரது உடல் எடை 330 கிலோவை எட்டியது.
இதனால் டேவிஸ் தன் அன்றாட பணிகளையும் செய்ய முடியாமல் சிரமப்பட்டார்.
எனவே, தன் எடையை குறைக்க எண்ணிய டேவிஸ் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அதன் பின்னர் இவரது உடல் எடை 114 கிலோவாக குறைக்கப்பட்டது. தினசரி உணவில் 1,500 கலோரியை மட்டுமே எடுத்து கொள்ள மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர்.
எனினும் உணவுக் கட்டுப்பாடு இல்லாததால் டேவிஸ் தினமும் 13 ஆயிரம் கலோரிகள் வரை உட்கொண்டதால் சில மாதங்களில் 178 கிலோ அதிகரித்து மீண்டும் 292 கிலோ உடல் எடையை எட்டியுள்ளார்.
டேவிஸின் உடல் பருமனாக இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக அவர் தங்கியிருக்கும் வீட்டின் சுவர் இடிக்கப்பட்டது.
மேலும், அறுவை சிகிச்சைக்காக 82 லட்சம் ரூபாய் செலவு செய்தும் மீண்டும் எடை அதிகரித்து விட்டதில் டேவிஸ் மன வருத்தத்துடன் உள்ளார்.