என்.ஆர்.ஐ.,களுக்கு விரைவில் ஓட்டுரிமை!

என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு, இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில், ஓட்டளிக்கும் உரிமையை அளிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்ட மத்திய அரசு,
 
அது தொடர்பாக விரைவில் முடிவெடுக்குமாறு, தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய சட்டத் துறையை வலியுறுத்தி உள்ளது. அதையடுத்து, அப்பணியில் தேர்தல் கமிஷன், மும்முரமாக இறங்கி உள்ளது.

இந்த விவகாரம் - இதுவரை:

* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிப்பது தொடர்பாக, தேர்தல் துணை கமிஷனர், வினோத் ஜட்சி தலைமையில், சட்டத் துறை, வெளியுறவுத் துறை, தேர்தல் கமிஷன் அதிகாரிகளை கொண்ட, 12 நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.

* அந்த கமிட்டி, என்.ஆர்.ஐ.,க்களுக்கு ஓட்டுரிமை குறித்து, 50 பக்க அறிக்கையை, கடந்த ஆண்டில், சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்தது.

* கடந்த, 2014 நவம்பர், இந்த கமிட்டியின் அறிக்கையை ஆராய்ந்த சுப்ரீம் கோர்ட், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிக்கும் வழிகளை ஆராயுமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

* கடந்த 8ம் தேதி, சுப்ரீம் கோர்ட்டின் மூன்று நீதிபதிகள் அமர்வு, மீண்டும் இந்த விவகாரத்தை விசாரித்தது. இரு மாதங்களுக்குள், தெளிவான அறிக்கையுடன் வர வேண்டும் என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

* அப்போது மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அரசியல் சட்டத்திருத்த மசோதா வரையப்பட்டு உள்ளது; அது, அமைச்சரவையின் பரிசீலனையில் உள்ளது என, தெரிவிக்கப்பட்டது.

* இ - தபால் ஓட்டு என்ற முறைப்படி, ஓட்டு படிவத்தை, மின்னணு முறையில், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு அனுப்பி, ஓட்டளித்த பின், அந்த ஓட்டுச்சீட்டு, சம்பந்தப்பட்ட தொகுதிக்கு அனுப்பி வைப்பது.
* பதிலி ஓட்டு என்ற மற்றொரு முறைப்படி, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு பதிலாக, அவர்கள் நியமனம் செய்யும் நபர், வெளிநாட்டில் வாழும் இந்தியர் விரும்பும் கட்சிக்கு அல்லது வேட்பாளருக்கு ஓட்டளிப்பார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950, 51ஐ திருத்தி, புதிய மசோதா தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதா, பார்லிமென்டின் இரு சபைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்ற,

சற்று அவகாசம் தேவைப்படுகிறது. எப்போது மசோதா நிறைவேற்றப்படும் என்பது தெரியாது. சதானந்த கவுடாமத்திய சட்டத் துறை அமைச்சர், பா.ஜ.,

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள்: 1.13 கோடி பேர் வசிக்கும் நாடுகள்:205
Tags:
Privacy and cookie settings