இனி ரயில்களில் பிட்சா மட்டுமல்ல.. கேஎஃப்சி சிக்கனும் கிடைக்கும் !

கடந்த ஒரு வருடமாக இந்திய ரயில்வே துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு முதலீடுகள், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது.
இனி ரயில்களில் பிட்சா மட்டுமல்ல.. கேஎஃப்சி சிக்கனும் கிடைக்கும் !
இந்நிலையில் பயணிகளுக்கு மேம்படுத்தப்பட்ட சேவையை அளிப்பதற்காக ஐ.ஆர்.சி.டி.சி அமைப்புத், சில மாதங்களுக்கு முன் 

இந்த உணவுகளுக்கு போட்டியாக டாமினோஸ் பிட்சா நிறுவனத்துடன் இணைந்து, ரயில் பயணிகளுக்கு புதிய சேவையை அளிக்க துவங்கியது. 

இத்தகைய சேவையை விரிவாக்கம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி அமைப்புத் தற்போது கேஎஃப்சி நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
12 ரயில்கள் 

முதல் கட்டமாக டெல்லியில் இருந்து விசாகப்பட்டனம், ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்குச் 

செல்லும் 12 ரயில்களில் அடுத்த 10 நாட்களில் இச்சேவை விரிவாக்கப்படத் திட்டமிட்டுள்ளது ஐ.ஆர்.சி.டி.சி.

பேன்ட்ரி கார்ஸ் 

தற்போது இத்துறையில் பேன்ட்ரி கார்ஸ் எனப்படும் சமையல் செய்ய ஏதுவான ரயில் பெட்டிகள் இல்லை என்பதால், சேவை விரிவாக்கம் செய்ய முடியாத நிலையில் உள்ளது. 

பெட்டி தயாரான உடனேயே ராஜ்தானி மற்றும் டுரோன்டோ ரயில்களிலும் இச்சேவை விரிவாக்கம் செய்ய உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

எப்படிச் சிக்கன் பெறுவது. 
இனி ரயில்களில் பிட்சா மட்டுமல்ல.. கேஎஃப்சி சிக்கனும் கிடைக்கும் !

ரயில்களில் கேஎஃப்சி சிக்கன் வேண்டும் என்றால், பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி இணையத் தளத்திற்குச் சென்று அல்லது 

இலவச தொலைப்பேசி எண்ணை கொண்டு ஆர்டர் செய்யலாம் என இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
கேஎஃப்சி நிறுவனம் 

இதுகுறித்துக் கேஎஃப்சி இந்தியா நிறுவன தலைவர் துருவ் கவுல் கூறுகையில், ரயில்களில் சேவை அளிக்கும் திட்டத்தில் மிகவும் ஆரம்பக் கட்டத்தில் மட்டுமே உள்ளோம், 

இதனை மேம்படுத்த சில நாட்கள் தேவைப்படுகிறது.
மிகப்பெரிய வாய்ப்பு 

மேலும் அவர் கூறுகையில், இந்திய ரயில்வே துறையில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம், எனவே இந்தியாவில் எங்களுக்கு வர்த்தகம் செய்யப் புதிய சந்தை கிடைத்துள்ளது.

தினமும் 1.3 கோடி பயணிகள் 

இந்திய ரயில்வே துறை தினமும் 12,500 பயணிகள் போக்குவரத்து ரயில்களை இயக்குகிறது. இதில் சுமார் 1.3 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர். உண்மையிலே மிகப்பெரிய சந்தை தான்.

டாமினோஸ் 
இனி ரயில்களில் பிட்சா மட்டுமல்ல.. கேஎஃப்சி சிக்கனும் கிடைக்கும் !
கடந்த பிப்ரவரி மாதம் டாமினோஸ் நிறுவனம் தனது சேவை இந்தியா ரயில்வே துறையில் துவங்கியது. 

தற்போது இந்நிறுவனம் தனது சேவையைச் சுமார் 200 ரயில்களில் விரிவாக்கம் செய்தாலும், தினமும் 350 பிட்சா-களை மட்டுமே விற்பனை செய்கிறது.
பிற நிறுவனங்கள் 

மேலும் ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பு பிட்சா ஹட் மற்றும் சப்வே நிறுவனங்களிடமும் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
Tags:
Privacy and cookie settings