சாராய போத்தலுக்காக சமந்தா போட்ட சண்டை !

பிரித்தானியாவில் உள்ள பிரஸ்டன்(PRESTON) என்னும் மாநிலத்தில் நடந்த கொடுமை இது. தனது வீட்டில் ஒரு தண்ணிப் பார்டியை ஏற்பாடு செய்துள்ளார் 20 வயதே ஆன சமந்தா.
 
குறித்த அந்த வீட்டு பார்டிக்கு சாமுவேல் என்னும் நபருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 

இவ்வாறு வீட்டில் நடைபெறும் பார்டிக்குச் செல்லும் போது அவரவர் தமக்கு பிடித்த சாராய பாட்டில்களை கொண்டு சென்று வீட்டு உரிமையாளருக்கு கொடுப்பது பிரித்தானியாவில் வழமையாக நடைபெறும் செயல் ஆகும்.

அந்த வகையில் சாமுவேலும் ஒரு சாராய பாட்டிலை எடுத்துச் சென்று, சமந்தாவிடம் கொடுத்துள்ளார். 

பார்டி என்னவோ நன்றாகத் தான் நடந்துள்ளது. சமந்தாவும் வெறியைப் போட்டு போதை உச்சத்திற்கு ஏறும் அளவில் இருந்துள்ளார்.

இன் நிலையில் பார்டி முடிவுக்கு வரவே அனைவரும் கிளம்பி வீடு செல்ல ஆரம்பித்தவேளை சாமுவேல் தான் கொண்டு வந்து கொடுத்த விஸ்கி பாட்டில் அப்படியே இருப்பதையும்,
எவரும் அதனைக் குடிக்கவில்லை என்பதனையும் கவனித்துள்ளார். அதனை அவர் எடுத்துக் கொண்டு தனது வீடு செல்ல முற்பட்ட வேளை , சமந்தாவோடு வாக்குவாதம் ஏற்பட்டு விட்டது.

இதனை அடுத்து கத்தி ஒன்றை எடுத்த சமந்தா சற்றும் எதிர்பாராமல் அவரைக் குத்தி விட்டார். 

இதனால் சாமுவேல் நிலத்தில் சாய்ந்தார். உனடியாக அங்கே வந்த மருத்துவர்கள் சாமுவேலை மருத்துவமனை கொண்டு சென்று அவசர சிகிச்சை கொடுத்தார்கள்.

உயிர் பிழைத்துக் கொண்ட சாமுவேலுக்கு கிட்னி மற்றும் ஈரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் கூடிய ரத்தப் பெருக்கு என்று கூறப்படுகிறது. 

சமந்தாவைக் கைது செய்த பொலிசார் அவரை நீதிமன்றில் நிறுத்தியுள்ளார்கள். இந்த வழக்கு நேற்று முன் தினம் முடிவுக்கு வந்துள்ளது. 
குற்றவாளி என்று இனம் காணப்பட்டுள்ள சமந்தாவுக்கு நீதிபதி 10 வருட சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். சமந்தாவின் சாராய வேட்க்கை இனி அடங்குமா ? தெரியவில்லை.
Tags:
Privacy and cookie settings