மின்சாரத் துறை பற்றி உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிட்டதாக, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டும் மற்றும் தண்டிக்கப்பட்டவருமான சி.செல்வராஜ், தன்னை வளர்த்த மின் வாரியம் நசிய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்திலும், அத்தியாவசிய தேவையான மின்சாரம் மக்களுக்கு முழு பயன்பாட்டில் இருக்கக்கூடாது என்ற நோக்கிலும் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய, ஒரு பொது நல மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
உயர்நீதிமன்றம் தீர விசாரிப்பதற்கு ஏற்ற மனுதானா என கண்டறிய முதல்கட்ட விசாரணையில் மட்டுமே அம்மனுவை வைத்திருக்கிறது.
மேற்கண்ட மனு மீது முதல் கட்ட விசாரணையே நிலுவையில் இருக்கும் நிலையில், அதில் கண்டுள்ள செய்திகள் முற்றிலும் நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு தவறு நடந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டது போல் சித்தரித்து, உண்மை எது, பொய் எது எனக்கூட அறியாமல் சொந்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும்,
அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலும், வியாபார நோக்கிலும், உள்நோக்கத்தின் அடிப்படையிலும் அவதூறாக எழுதும் சில பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையிலும் தி.மு.க. தலைவர் அளித்துள்ள அறிக்கை உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து, நீண்ட காலத்திற்கு, மின்சாரம் வாங்குவதற்காக மாநில அரசுக்கு சொந்தமான 3 மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தியை நிறுத்தி மின் பற்றாக்குறையை செயற்கையாக உருவாக்குகிறார்கள் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.
ஆண்டுக்காண்டு, அதிகரித்து வரும் தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய, மின்வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி மூலமாகவும் மேலும் மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாகவும், மரபுசாரா எரிசக்தி மூலமாகவும், மின் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெறப்படும் மின்சாரம், மின் தேவையில் சுமார் 77 சதவீதம் ஆகும்.
மீதமுள்ள மின் தேவையில் சுமார் 17 சதவீதம், மத்திய அரசின் மின் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஒப்பந்தப்புள்ளி மூலமாக நீண்டகால, நடுத்தர கால மற்றும் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுடன் மின் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதுதவிர, குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாக 3 சதவீதம் அளவுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட விலை ஏறுமுக வரிசை விதியைப் பின்பற்றி குறைந்த விலையில் மின்சாரத்தை முதலில் பெற்று, படிப்படியாக ஏறுமுக வரிசையில் தேவை நிறைவடையும் வரை உயர்ந்த விலை மின் உற்பத்தி நிலையங்களிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.
மேற்கண்ட அனைத்து குறைந்த விலை ஆதாரங்களின் மூலமாக கிடைக்கும் மின்சாரத்தை முழுமையாகக் கொள்முதல் செய்த பிறகே, நிகர மின் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு தமிழகத்தில் உள்ள நீண்ட கால மின் கொள்முதலுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து சுமார் 3 சதவீத அளவிற்கு மட்டும் கொள்முதல் செய்யப்படுகிறது.
இம்மின்சாரத்தின் கொள்முதல் அளவு நாளுக்கு நாள், மணிக்கு மணி என்று மாறுபடும். தேவையான மின்சாரம் குறைந்த விலை ஆதாரங்கள் மூலம் கிடைக்கும்போது, இம்மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரம் முதலில் நிறுத்தப்படுகிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியாளர்களால் வெளிச்சந்தையில் இருந்து அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்து வந்த போதிலும், மின்வெட்டை 10 முதல் 12 மணி கால அளவு வரையில் அமல்படுத்தி வந்தனர்.
ஆனால் ஜெயலலிதாவின் அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மின் விநியோகம் படிப்படியாகச் சீரமைக்கப்பட்டு, தற்போது மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த மகத்தான சாதனையை பொறுத்துக்கொள்ள முடியாமல், மின்சாரம் அதிக விலை கொடுத்து வாங்கி வருவதாக ஒரு தவறான செய்தியை பரப்பி வருகின்றார்.
முந்தைய தி.மு.க. அரசானது, 2006-2007 முதல், 2010-2011 வரை 5 ஆண்டுகளில் 20,355 மில்லியன் யூனிட் மின்சாரத்தை ஜி.எம்.ஆர். போன்ற 4 தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்தது. அதற்கான ஒப்பந்தங்களும் தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் போடப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
காற்றாலை மின் பிரிவின் மூலம் 24,309 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளது என்று தவறான தகவல் தரப்பட்டுள்ளது. மேலும் அவதூறு செய்திகளை தொடர்ந்து பரப்பிவரும் செல்வராஜ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது மனுவில் 2006-07 முதல் 2011-12 காலக் கட்டங்களில் காற்றாலை மின்சாரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள தொகை ரூ.12,931 கோடி.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பொது நல வழக்கில் கூறப்பட்டுள்ள காற்றாலை மின்சாரத்தை கையாளுவதில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் தொகைக்கான காலக்கட்டம், 2006-2007 முதல் மற்றும் 2011-2012 வரையில் உள்ள கால கட்டமாகும்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், 2006-2007 முதல் 2010-2011 வரையில் ஆட்சியில் இருந்தவர்கள் முந்தைய தி.மு.க.வே ஆகும். எனவே, இந்த புகாருக்கு பதில் அளிக்கப் பொறுப்பானவர்களே, புகார் கூறுவது விந்தையாக உள்ளது.
பழைய மின்அளவிகளை விடுவித்து புதிய மின் அளவிகள் கொள்முதல் செய்ததில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ள தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவலாகும்.
ஜெயலலிதா மின்சாரத் துறையில் செய்திருக்கும் அளப்பரிய சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாத கருணாநிதி மற்றும் சில லெட்டர் பேடு அரசியல்வாதிகள் முற்றிலும் பொய்யான செய்திகளை தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட வெகு ஜன விரோதிகளுக்கு 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பதோடு மீண்டும் ஜெயலலிதாவை இமாலய வெற்றி பெற செய்து, தமிழக முதல்வராக அரியணையில் அமர வைப்பது உறுதி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.