அமெரிக்காவில் பிட்காயின் மோசடி !

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு கரன்சி இருக்கிறது. உலக அளவில் 


எல்லா நாட்டின் கரன்சிகளும் எல்லா நாடுகளிலும் வியாபாரத் துக்கு மாற்றாக ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை.

டாலர், பவுண்டு, யூரோ, பிராங்க், யென் போன்ற சில பாப்புலர் கரன்சிகளே உலகம் முழுவதிலும் வியாபாரம் செய்வதற்கு உதவுகிறது. இதில் டாலர் உலகப்பிரசித்தம்.

வெளிநாட்டில் இருந்து வாங்கும் பொருட் களுக்கு பெரும்பாலும் டாலர் களிலேயே பணம் தரவேண்டி யுள்ளது. 

வெளிநாடுகளி லிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போது, உள்ளூர் கரன்சியைத் தந்து டாலரை வாங்கி செட்டில் செய்ய வேண்டி யுள்ளது.

ஒரே நேரத்தில் பலரும் டாலர் வேண்டும் என்று கேட்டு வரும் போது அதன் மதிப்பு உயருகிறது;

அதிகமாக விற்கப்படும் கரன்சியின் மதிப்பு குறைகிறது. இதுதான் கரன்சி சந்தையின் நடைமுறை.

மாறும் கரன்சி மதிப்பு!

இயற்கை யாக ஒரு கரன்சியின் மதிப்பு உயர்ந்து, இன்னொரு கரன்சியின் மதிப்பு குறைவது ஒருபக்கம் இருந்தாலும், 

வேண்டுமென்றே தகிடுதத்தம் செய்து (சண்டை மூட்டி விட்டு கூட லோக்கல் கரன்சியின் 

தேவையை அதிகரிக்கச் செய்து), ஒரு நாட்டு பணத்தின் மதிப்பை இழக்கச் செய்வதும் சாத்தியம் தான்.

ஏனென்றால், பிரச்னை வரும் போது லோக்கல் அரசாங்கங்கள் கரன்சியை அச்சிட்டு புழக்கத்தில் விட்டு விடும். 


அதிக அளவில் லோக்கல் கரன்சி புழக்கத்தில் இருக்கும் போது டாலரின் மதிப்பு அதிகரிக்கும்.

தவிர, ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சார்ந்ததாக கரன்சி இருப்பதால் அரசாங்கங்கள் தங்களின் தேவைக்கு ஏற்றாற் போல் நோட்டை அச்சடித்து வெளியே விட்டு விடுகின்றன.

கன்ஸ்யூ மருக்கான இறக்குமதி, சண்டையின் போது போர்த் தளவாடம் இறக்குமதி என பல்வேறு தேவை களினாலும் டாலரின் தேவை அதிகரிக்கிறது.

இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அரசியல் வாதிகளும், அதிபர்களும், அரசாங்கங் களும் தான். 

ஆனால், பாதிக்கப் படுவது என்னவோ, தனி மனிதர்களும் முதலீட்டாளர் களும்தான்.

விநோதமான தீர்வு!

இந்தப் பிரச்னைக்கு விநோதமான ஒரு தீர்வாக, அரசாங்கம் மற்றும் எந்த வொரு நாட்டுடனும் 

சம்பந்த மில்லாத கரன்சியைக் கொண்டு வருகிறோம் என்று சொல்லி, அடையாளம் தெரியாத ஒரு கும்பல்

(இந்த பிட்காயினை வெளியிடுவது யார் என்பது கண்டு பிடிக்கப்படாத ரகசியமாக இருக்கிறது!) 

வெளி யிட்டிருக்கும் வர்ச்சுவல் பணம் தான் இந்த பிட்காயின். இந்த கரன்சி எந்த நாட்டையும் சார்ந்ததில்லை.

எந்த அரசும் இதை வெளியிட வில்லை. இதன் பின்னணியில் ரிசர்வ் வங்கிகள் ஏதுமில்லை. 

இந்த கரன்சி எந்த அளவுக்கு புழக்கத்தில் இருக்கிறது என்பதை நிர்ணயம் செய்வதும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம் தான்.


2030-ம் ஆண்டுக்குப் பிறகு 21 மில்லியன் பிட்காயின் கரன்சிகளை அதி கபட்சமாக வெளியிட்டு, 

அதற்குப் பின்னர் புது கரன்சிகள் எதையும் வெளியிடாமல் இந்த புரோகிராம் நிறுத்தி விடும் என்கிறார்கள்.

எந்த நாடும் வெளியிடாத இந்த கரன்சி எப்படி இருக்கும்? யார் இந்தக் கரன்சி குறித்த டேட்டாக்களை வைத்திரு ப்பார்கள்? என்று கேட்பீர்கள்.

பியர்-டு-பியர் கம்ப்யூட்டிங் என்ற டெக்னிக்கின் மூலமாக உங்கள் கம்ப்யூட்ட ரிலேயே இந்த கரன்சியின் விவரங்கள் இருக்கும். 

இதை வைத்து உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம் அல்லது விற்றும் கொள்ளலாம்.

இது கரன்சியே அல்ல!

நிறைய இன்டர்நெட் ஸ்டோர்களும், நிறையக் கடைகளுமே இதை பெற்றுக் கொள்வதாகச் சொல்கின்றன செய்திகள். 

அமெரிக்க அரசின் சட்டப்படி, இது ஒரு கரன்சியே கிடையாது. பண்டமாற்று முறையை போல் டாலரைத் தந்து இந்த பிட்காயினை வாங்குகி றார்கள்.

பின்னர் இந்த பிட்காயினைத் தந்து வேறு ஒரு சாமானை வாங்குகிறார்கள் (உதாரணத்துக்கு ஒரு டீ/காபி/புத்தகம் போன்றவை). அமெரிக்க அரசாங்கமோ,

இது முழுமை பெறாத அரைவேக்காட்டு சிஸ்டம். அமெரிக்கா வுக்குள், பிட்காயின் பொருட் களுக்கு எதிராக மாற்றப் பட்டால் பண்டமாற்று சட்டம் அதைக் கண்காணிக்கும்.

யார் எத்தனை காயின் மாற்றுகிறார்கள், யாருக்குப் பணம் போனது என்று விசாரிப்போம் என்று எச்சரிக்கிறது அமெரிக்கா. 


இதுவும் தவிர, வருமானம்,  கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸ் என்ற குழப்ப மெல்லாம் வேறு இதில் நிறையவே இருக்கிறது.

ஏறியிறங்கிய மதிப்பு!

இந்த பிட்காயினின் மதிப்பு முதலில் 2009-ல் ஆரம்பிக்கப்பட்ட போது, 25 டாலராக இருந்து; பின்னர் 2011-ல் 250 டாலர் வரை சென்று; 

பின்னர் திடீரென 150 டாலர் வரை சரிந்து, பின்னர் 2013-ல் 900 டாலர் வரை சென்று,

கடந்த வாரத்தில் 700 டாலருக்கு இருந்தது என்கிறார்கள். ஏன் இந்த ஏற்ற இறக்கம் என்றால் 
ஏகப்பட்ட ஸ்பெக்குலேட்டர்கள் இந்தச் சந்தைக்குள் புகுந்து விட்டார்கள் என்கின்றனர் பலர்.

அமெரிக்கா மாதிரி சட்டதிட்டங்கள் கடுமையாக உள்ள நாட்டிலேயே இந்த காயின் குறித்து 

ஒரு தெளி வின்மையும், பிற்காலத்தில் பிரச்னையை உருவாக்கி விடும் என்ற எண்ணமே அரசாங்கத்திடம் இருக்கிறது.

எந்த நிமிடத்திலும் இந்தப் பிரச்னை பூதாகரமாக வெடிக்கலாம் என்றும் பலரும் பயப்படுகி றார்கள். இந்தியாவில் செல்லாது!


இந்தியா வில், பிட்காயின் சட்டப்படி செல்லு படியாகாத ஒரு விஷயம். 

சட்டப்படி செல்லும் விஷயங் களிலேயே சிக்கல்கள் வந்து முதலீடு முழுவதும் பணால்

ஆகிவிடுகிற இந்தக் காலத்தில், இது போன்ற சட்டப்படி செல்லாத விஷயங் களை வாசகர்கள் நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது.

நம்மூரில் புத்துணர்ச் சியுடன் அலையும் மோசடி கும்பல்கள் நேரிலோ, மெயிலிலோ உங்களிடம் வந்து, என்னிடம் பிட்காயின் இருக்கிறது என்று சொன்னால்,

‘அந்த ‘பிட்டு’ எல்லாம் என்கிட்ட போடாதீங்க’ என்று விரட்டி விடுங்கள். இல்லா விட்டால், ஏமாறுவது நிச்சயம்… ஜாக்கிரதை!
Tags:
Privacy and cookie settings