பிரிட்டனில் படிக்கலாம் வேலை செய்ய முடியாது !

லண்டன் : பிரிட்டனில் அடுத்த மாதம் அமலுக்கு வரும் புதிய சட்டத்தால், வெளிநாடுகளில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். 
பிரிட்டனில் படிக்கலாம் வேலை செய்ய முடியாது !
குறிப்பாக, ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பாதிக்கப்படுவர். இந்தியாவில் இருந்து, ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், தங்களுடைய கல்விக்காக, பிரிட்டனுக்கு செல்கின்றனர். 

அந்நாட்டு கல்லுாரிகளில் படித்துக் கொண்டே, பகுதி நேரமாக, வாரத்திற்கு 10 மணி நேரம் பணி செய்யலாம் என்ற வசதி உள்ளது.

இதன் காரணமாக, இங்கு படிக்கும் இந்திய மாணவர்கள், படித்துக் கொண்டே, பகுதிநேர வேலையில் சேர்ந்து, தங்கள் சொந்த செலவுகளை சமாளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, அந்நாட்டு குடியேற்ற துறை அமைச்சர் ஜேம்ஸ் புரோக்கன்ஷயர் கூறியதாவது:

பிரிட்டன் கல்லுாரிகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், பகுதி நேரமாக பணிபுரியும் வசதி தடை செய்யப்படுகிறது.

இந்த கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், படிப்பு முடிந்ததும், பிரிட்டன் விசா கோரி விண்ணப்பிக்க முடியாது.
படிப்பை முடித்தவர்கள், பிரிட்டனில் தங்கியிருக்கும் காலம் மூன்று ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. 

இந்த புதிய சட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings