சத்தியமங்கலம் பஸ் நிலையம் எதிரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடைக்கு மது குடிக்க வரும் குடிமகன் களால் பெண்களும், பள்ளி, கல்லூரி மாணவ– மாணவி களும் பாதிக்கப்படு வதாகவும், இதனால் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று மதியம் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.
முன்னதாக சத்திய மங்கலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து பவானிசாகர் தொகுதி செயலாளர் தாமோதரன் தலைமையில் 100–க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர்.
பவானிசாகர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார், மேற்கு மண்டல செயலாளர் வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதை தொடர்ந்து டாஸ்மாக் கடை முன்பு நாம் தமிழர் கட்சியினர் கட்சியினர் ஊர்வலமாக வந்து திரண்டனர். பின்னர் திடீரென அவர்கள் அனைவரும் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர்.
உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற சத்தியமங்கலம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 100–க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
டாஸ்மாக் கடையை முற்றுகையிட நடத்திய போராட்டம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.