பஞ்சாபில் தீவிரவாதிகள் தாக்குதல்: கெஜ்ரிவால் கடும் கண்டனம்

0 minute read
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் ராணுவ சீருடையில் தீவிரவாதிகள் போலீஸ் நிலையத்தில் நடத்திய தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 2 போலீசார் உள்பட 5 பேர் பலியானார்கள்.
 
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் கோழைத்தனமான செயலாகும். இந்த தாக்குதலில் பஞ்சாப்பின் அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

பஞ்சாப் மாநில மக்களுடன் நான் இருக்கிறேன். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings