சிறைகளில், போலீஸ் நிலையங்களில் , லாக்அப் அறைகளில் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பினர்.
சிறை மற்றும், போலீஸ் ஸ்டேஷன்களில் நடக்கும் விஷயங்களை கண்டறியவும், அதனை கண்காணிக்கவும், சர்ச்சைகள் வரும் போது இதனை ஆதாரமாக எடுத்து கொள்ள உதவும் என மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் , மாநில அரசுகள் மேற்கூறிய இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
அனைத்து மாநில அரசுகளும் மனித உரிமை கமிஷன் நிர்வாகத்தில் காலியாக கிடக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் 2 பெண் காவலர்கள் பணியில் இருக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளனர்.
உத்தரவுக்கு வரவேற்பு :
இந்த உத்தரவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறு காமிரா பொருத்தப்படும் போது , லாக்அப் மரணங்கள் குறையுவும் வாய்ப்பு இருக்கிறது என கருத்து தெரிவிக்கின்றனர்