இந்தியர்கள் உணவுக்காக அதிகம் செலவிடுகிறார்கள் !

ஓர் இந்தியர் தனது மொத்த செலவில் சராசரியாக 65%-ஐ உணவுக்காக செலவிடுவ தாக புள்ளி விவரம் வெளியிடப் பட்டுள்ளது. 
இந்தியர்கள் உணவுக்காக அதிகம் செலவிடுகிறார்கள் !
டயட் அட்லஸ் ஆஃப் இந்தியா (Diet Atlas of India) என்ற பெயரில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இந்த புள்ளி விவரத்தை வெளியி ட்டுள்ளது.

இதற்காக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், பல்வேறு தரப்பு மக்களிடம் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. 

அதன்படி, கிராமப்புற மக்கள், நகர்ப்புற மக்களவைவிட அதிகளவில் உணவு தானியங் களுக்காக செலவு செய்கின்றனர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

அதாவது ஒரு கிராமவாசி, தனது உணவுக்கான தனது மொத்த செலவினத்தில் 41% உணவு தானியங்களுக்காகவும், 8% பால் பொருட்களு க்காகவும், 19% மற்றவைக் காகவும் செலவிடுகிறார். 
அத ேவேளையில் நகர்ப்புறத்தில் வசிக்கும் நபர் ஒருவர், தனது உணவுக்கான தனது மொத்த செலவினத்தில் 25% உணவு தானியங்களுக்காகவும், 

9% பால் மற்றும் பால் சார்ந்த பொருட்க ளுக்காகவும், 26% மற்ற உணவு வகைகளுக்காகவும் செலவிடுகிறார். 

மேலும் அந்த ஆய்வறிக்கை யின்படி நாட்டில் பாதிக்கும் அதிகமானோர் அசைவ உணவு உண்பவர்களாகவே உள்ளனர். 

குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் மட்டுமே சைவ உணவு சாப்பிடுவோர் அதிகமாக இருக்கின்றனர். 
அந்த மாநிலங்களில் மொத்த மக்கள் தொகையில் 40%-க்கு குறைவான வர்களே அசைவ உணவு உண்கின்றனர் எனத் தெரிகிறது. 
Tags:
Privacy and cookie settings