இந்தியாவின் மலிவு விலை விமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்பைஸ்ஜெட், நிர்வாக மாற்றத்திற்குப் பின் தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
மேலும் இத்துறை நிறுவனங்கள் மத்தியில் உள்ள போட்டியை தெளிவான திட்டமிடலுடன் தனது வர்த்தகத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
2015ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பல போராட்டத்திற்குப் பிறகு 72.80 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது சந்தையைக் கலக்கியுள்ளது.
நஷ்டம் முதல் லாபம் வரை..
கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் 124.10 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துத் தற்போது 72 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது.
கிங்பிஷர்
இந்திய விமான நிறுவனங்களிலேயே கிங்பிஷர் நிறுவனத்திற்குப் பின் மோசமான நிலையைச் சந்தித்தது ஸ்பைஸ்ஜெட் தான்.
தற்போது நாட்டின் முன்னணி நிறுவனங்களுடன் போட்டிய போடும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
பணியனிகள் எண்ணிக்கை
இந்நிலையில் 2015ஆம் ஆண்டின் முதலஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் 89.8 சதவீதம் வரை பயணிகள் மற்றும் சரக்கு சேவை அளித்ததுள்ளது. கடந்த வருடம் இதன் அளவு வெறும் 14.8 சதவீதம் தான்.
அஜய் சிங்
காலாண்டு முடிவுகளை வெளியீடு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஜய் சிங் கூறுகையில், 'சர்வதேச விமான நிறுவனத்தை உருவாக்கும் பணியில் ஸ்பைஸ்ஜெட் செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்த முடிவுகள் நாங்கள் சரியான பாதையில் தான் செல்கிறோம் என நம்பிக்கை அளிக்கிறது.' எனத் தெரிவித்தார்.
பொறுப்பு
சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி மாறன் நிறுவன பொறுப்புகள் மற்றும் நிர்வாகக் குழுவில் இருந்து வெளியேறிய நிலையில், அஜய் சிங் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.
பல்வேறு திட்ட நடவடிக்கை
இதன் பின் அஜய் சிங் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பல திட்டங்கள் நிறைவேற்றினார்,
இதில் ஆட்குறைப்பு மற்றும் செலவீண குறைப்பு நடவடிக்கைகளும் அடங்கும். மேலும் கடந்த 6 மாத காலங்களில் இந்நிறுவனத்தில் பலவேறு முதலீடுகள் குவிந்தது.
பங்குச்சந்தை
இந்நிறுவன முடிவுகள் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
இதன் காரணமாக இந்நிறுவனப் பங்குகள் இன்று 5.08 சதவீதம் உயர்ந்து 27.95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.