6 மாத காலமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் காலமானார். அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
செந்தூர் பாண்டியன்
தமிழக அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியன் கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி தலைமை செயலகத்தில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டபோது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் உடல் நிலை மேலும் மோசமானதால் அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இங்கு கடந்த 6 மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சில நாட்களிலேயே அவர் கோமா நிலையை அடைந்தார். படுத்த படுக்கையான நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
காலமானார்
இதற்கிடையே அவர் வகித்து வந்த இந்து சமய அறநிலைய இலாகா, உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செந்தூர் பாண்டியன் இலாகா இல்லாத அமைச்சர் என்ற அந்தஸ்துடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 6 மாதமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் அவரது உடல் நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. நேற்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்தது. காலை 6.50 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 64.
செந்தூர் பாண்டியன் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. பொருளாளரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் வளர்மதி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.
ஜெயலலிதா சார்பில் அஞ்சலி
முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோர் செந்தூர் பாண்டியன் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவரது உறவினர்களிடம் அமைச்சர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டனர்.
இதையடுத்து அவரது உடல் தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தியில் இறுதி சடங்குக்காக அவரது சொந்த ஊரான செங்கோட்டைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
வாழ்க்கை குறிப்பு
செந்தூர் பாண்டியன் செங்கோட்டை அருகே உள்ள தலைவன் கோட்டையில் 1951-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ந்தேதி பிறந்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் 8-ம் வகுப்பு வரை படித்திருந்தார். இவரது மனைவி சண்முக துரைச்சி.
இவர்களுக்கு அய்யப்பராஜ், கிருஷ்ண முரளி என்ற 2 மகன்களும், பிரியதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். பிரியதர்ஷினி டாக்டராக பணியாற்றி வருகிறார். மூத்த மகன் அய்யப்பராஜ் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார்.
இளம் வயதில் இருந்தே அ.தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டு செயல்பட்ட செந்தூர் பாண்டியன் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். செங்கோட்டை கூட்டுறவு பால் பண்ணை சங்கத்தலைவர், செங்கோட்டை நகரசபை துணைத்தலைவர், செங்கோட்டை நகர அ.தி.மு.க. செயலாளர் பதவிகளை வகித்தார்.
2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதன் முதலாக கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அமைச்சரவையில் செந்தூர்பாண்டியன் காதி மற்றும் கிராம தொழில் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றார்.
கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது கோகுல இந்திரா வகித்து வந்த சுற்றுலாத்துறை இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே ஆண்டு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட போது செந்தூர்பாண்டியன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனார்.
இறுதி சடங்கு
செந்தூர் பாண்டியன் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது சொந்த ஊரான தலைவன் கோட்டையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வைக்கப்படும் என்றும், அன்று மாலையே அவர் உடலுக்கான இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.