ஆஷிஷ் சதுர்வேதி என்னும் இளைஞரைப் பற்றி படிக்க படிக்க ஆச்சரியம் தொற்றிக் கொள்கிறது,
சதுர்வேதியும் அவரின் ஆயுள்-பாது காவலரும் |
வியாபம் ஊழலின் ஊற்றுக் கண்ணை வெளிக் கொணர்ந்த ஒரு ஏழை இளைஞன்.
வியாபம் ஊழலை எளிமையாக விளக்க வேண்டும் என்றால் வசூல்ராஜா MBBS படத்தை எடுத்துக்கொள்ளலாம்.
அதில் வரும் ப்ரொஃபஸர் க்ரேஸி மோகன் பக்கிரி கமல் ஹாசனின் மிரட்டலுக்கு பயந்து தலையில் விக் வைத்துக் கொண்டு
வசூல்ராஜா வுக்கு பதிலாகச் சென்று மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிவிட்டு வருவார் அல்லவா?
அது போன்றுத் தான் இந்த வியாபம் ஊழலில் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு
நன்றாகப் படிக்கும் மாணவர்களும், லெக்சரர்களும், தகுதியற்றவர்களுக்கு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தும்,
நன்றாகப் படிக்கும் மாணவர்களும், லெக்சரர்களும், தகுதியற்றவர்களுக்கு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தும்,
பேப்பர் சேஸிங் செய்தும் வெற்று தேர்வுத் தாள்களை சரியான விடைகள் கொண்டு நிரப்பி தற்குறிகளே அங்கு தேர்வான அவலம் கடந்த 10 ஆண்டுகளில் அரங்கேறியுள்ளது.
இப்படி தேர்வாகி வந்தவர்கள் தான் அநேகம் பேர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவர்கள்,
பொறியாளர்கள், ஆசிரியர்கள், காவல்துறை ,வனத்துறை , பொதுத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், இது எப்படி இருக்கு?
இந்தியனாக இருப்பதில் மிகவும் அருவருப் படையும் தருணம் இந்த வியாபம் ஊழலைப் பற்றி படிக்கும் தருணம் என்றால் மிகை யில்லை.
நம்மூரிலும் தான் ஊழல் நடக்கிறது, ஆனாலும் பொதுப்பணி நுழைவுத் தேர்வுகளில் இது போல BROTHEL செய்யவில்லை.
இத்தனைக்கும் இங்கே கல்வித்தந்தைகள் அந்நாளைய சாராய வியாபாரிகள் தான்.
இத்தனைக்கும் இங்கே கல்வித்தந்தைகள் அந்நாளைய சாராய வியாபாரிகள் தான்.
அவலட்சணம் பொருந்திய வியாபம் லோகோ |
நம் இந்திய கல்வி நிறுவனங்கள் அகில உலக அளவில் நூறாம் இடம் கூட பிடிக்க முடியாமல் போனது இது போன்ற துடைக்க முடியாத களங்கங்களால் தான்.
வியாபம் ஊழலை வெளிக்கொணர்ந்த ஆஷிஷ் சதுர்வேதியின் ஃபேஸ்புக் பக்கம்
https://www.facebook.com/pages/Ashish-Chaturvedi-The-youngest-whistle-blower-of-Vyapam-Scam/708858335908572
வியாபம் ஊழலைப் பற்றி படிக்க : https://en.wikipedia.org/wiki/Vyapam_scam
வியாபம்[வியாபாரம்] இணையத்தளம் : http://www.vyapam.nic.in/