இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை என்ற அழைக்கப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எடுத்துக் கொண்ட அனைத்து திட்டங்களையும் கடைசி வரை விடாமுயற்சியோடு உழைத்து வெற்றி கண்டவர்.
இந்தியாவின் விண்வெளி துறை மற்றும் ஏவுகணை தொழில்நுட்பங்களை பல புதிய உயரங்களை தொடச் செய்தவர். அவர் ஏற்று நடத்திய திட்டங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
1960களில் தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் பணியில் சேர்ந்த அப்துல் கலாம் ராணுவத்திற்காக சிறிய ஹெலிகாப்டர் ஒன்றை வடிவமைத்து தனது பணியை துவங்கினார்.
ஆனாலும், அவருக்கு அந்த ஹெலிகாப்டர் திட்டம் முழுமையாக நிறைவை தரவில்லை.
ழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான இந்தியாவின் முதல் விண்வெளி ஏவுவாகனமான எஸ்எல்வி-III தயாரிப்பின் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
1980ல் ரோஹிணி செயற்கைகோளை சுமந்து சென்ற அந்த விண்வெளி ஏவு வாகனம் வெற்றிகரமாக ஏவப்பட்டு புவி வட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
1970களில் விண்வெளி ஏவு வாகனத்தின் தொழில்நுட்ப அடிப்படையில், புராஜெக்ட் டெவில் மற்றும் புரொஜெக்ட் வேலியண்ட் என்ற இரண்டு புதிய ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது.
அதாவது, சீனாவுடன் நடந்த போரினால் ஏற்பட்ட தோல்வியிலிருந்து பாடம் கற்று, நாட்டின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான மிக முக்கியமான திட்டம் அது. அந்த திட்டங்கள் அப்துல்கலாமிடம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஒப்படைத்தார்.
ஏவுகணை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி மறுத்தது. ஆனால், பிரதமர் இந்திரா காந்தி ரகசியமாக நிதி ஒதுக்கீடு செய்து ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை உருவாக்கும் திட்டங்களை அப்துல் கலாமிடம் ஒப்படைத்தார்.
நடுத்தர தொலைவு தாக்குதல் இலக்கு கொண்ட அக்னி ஏவுகணை திட்டம் அப்துல்கலாம் தலைமையிலேயே நடந்தது. 1989ல் அந்த அக்னி- 1 ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது.
அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கை துல்லியமாக தாக்க வல்ல பிருத்திவி ஏவுகணை திட்டத்திலும் அப்துல் கலாமின் பங்கு முக்கியமானது. தற்போது இந்த ஏவுகணையும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அணு ஆயுத நாடாக இந்தியாவை உலக அரங்கில் கொண்டு சென்ற இரண்டாவது பொக்ரான் அணுகுண்டு சோதனையிலும் அப்துல் கலாமிற்கு மிக முக்கிய பங்கு வகித்தார்.வல்லரசு நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கான புதிய தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், சாதனங்களை உருவாக்கி இந்தியாவையும் வல்லரசு நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக மாற்றிய பெருமை அப்துல் கலாமை சாரும்.
அப்துல் கலாம் செய்த மகத்தான சாதனைகள் அவருக்கு எளிதாக கிட்டவில்லை. பல்வேறு நெருக்கடிகளையும், சர்ச்சைகளையும் எதிர்கொண்டார்.
அனைத்தையும் தன் புன்சிரிப்பாலும், உழைப்பாலும், திறமையாலும் முறியடித்தே தன் இலக்குகளை எட்டினார். அவரது வாழ்க்கை எதிர்காலத்தை கட்டமைக்க இருக்கும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆரம்பத்தில் சில சறுக்கல்களை சந்தித்தாலும், அதனை கண்டறிந்து வெகு அழகாக அந்த தவறுகளை கடந்து பல வெற்றிகரமான விண்வெளி ஏவு வாகனம் மற்றும் ஏவுகணை திட்டங்களை ஏற்று வெற்றி கண்டவர்.
இந்தியாவின் விண்வெளி துறை மற்றும் ஏவுகணை தொழில்நுட்பங்களை பல புதிய உயரங்களை தொடச் செய்தவர். அவர் ஏற்று நடத்திய திட்டங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
01. ஹெலிகாப்டர்
1960களில் தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் பணியில் சேர்ந்த அப்துல் கலாம் ராணுவத்திற்காக சிறிய ஹெலிகாப்டர் ஒன்றை வடிவமைத்து தனது பணியை துவங்கினார்.
ஆனாலும், அவருக்கு அந்த ஹெலிகாப்டர் திட்டம் முழுமையாக நிறைவை தரவில்லை.
02. விண்வெளி ஏவு வாகனம்
ழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான இந்தியாவின் முதல் விண்வெளி ஏவுவாகனமான எஸ்எல்வி-III தயாரிப்பின் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
1980ல் ரோஹிணி செயற்கைகோளை சுமந்து சென்ற அந்த விண்வெளி ஏவு வாகனம் வெற்றிகரமாக ஏவப்பட்டு புவி வட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த தருணம் அது. தனது பேட்டிகளில் தன் வாழ்நாள் சாதனைகளில் ஒன்றாக இதனையும் அப்துல் கலாம் குறிப்பிடுவார்.
03. ரகசிய திட்டங்கள்
1970களில் விண்வெளி ஏவு வாகனத்தின் தொழில்நுட்ப அடிப்படையில், புராஜெக்ட் டெவில் மற்றும் புரொஜெக்ட் வேலியண்ட் என்ற இரண்டு புதிய ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது.
அதாவது, சீனாவுடன் நடந்த போரினால் ஏற்பட்ட தோல்வியிலிருந்து பாடம் கற்று, நாட்டின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான மிக முக்கியமான திட்டம் அது. அந்த திட்டங்கள் அப்துல்கலாமிடம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஒப்படைத்தார்.
04. ரகசிய நிதி ஒதுக்கீடு
ஏவுகணை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி மறுத்தது. ஆனால், பிரதமர் இந்திரா காந்தி ரகசியமாக நிதி ஒதுக்கீடு செய்து ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை உருவாக்கும் திட்டங்களை அப்துல் கலாமிடம் ஒப்படைத்தார்.
05. அக்னி ஏவுகணை
நடுத்தர தொலைவு தாக்குதல் இலக்கு கொண்ட அக்னி ஏவுகணை திட்டம் அப்துல்கலாம் தலைமையிலேயே நடந்தது. 1989ல் அந்த அக்னி- 1 ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, இன்று பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் அளவுக்கு அக்னி- 6 திட்டம் வளர்ந்துள்ளது. அதற்கு அடிப்படை வித்தை விதைத்தவர் அப்துல்கலாம்தான்.
06. பிருத்திவி ஏவுகணை
அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கை துல்லியமாக தாக்க வல்ல பிருத்திவி ஏவுகணை திட்டத்திலும் அப்துல் கலாமின் பங்கு முக்கியமானது. தற்போது இந்த ஏவுகணையும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
07. அணு ஆயுத வல்லரசு
அணு ஆயுத நாடாக இந்தியாவை உலக அரங்கில் கொண்டு சென்ற இரண்டாவது பொக்ரான் அணுகுண்டு சோதனையிலும் அப்துல் கலாமிற்கு மிக முக்கிய பங்கு வகித்தார்.
08. சோதனையில் சாதனை