ஒரே நாளில் இரண்டு இஸ்லாமியர்களின் இறுதிச் சடங்கு.. திக்விஜய் சிங்!

1 minute read
ஒரே நாளில் இரண்டு இஸ்லாமியர்களின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் கடந்த திங்கட்கிழமை மாலை மரணம் அடைந்தார். அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று(வியாழன்) நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதில் பிரதமர் மோடி,காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக அமைச்சர்கள், அண்டை மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், பொது மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான யாகூப் மேமனுக்கு, நாக்பூர் சிறையில் இன்று தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்டது.

இந்நிலையில் மும்பை தாக்குதல் தீவிரவாதியை, அப்துல் கலாமுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் தனது டி விட்டர் பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ளது

சமூகவலைதள ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. " யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டு உள்ளார்.

தீவிரவாத தாக்குதல் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றுவதில் அரசு மற்றும் நீதித்துறை மூலம் போதுமான அவசரமும், அர்ப்பணிப்பும் காட்டப்பட்டு உள்ளது.

இதேபோன்று சாதி மற்றும் மதத்திற்கு அப்பாற்பட்டு, அனைத்து தீவிரவாத வழக்குகளிலும் நீதித்துறை மற்றும் அரசு இதே அர்ப்பணிப்பை காட்டும் என்று நான் நம்புகின்றேன்.

பிற தீவிரவாத வழக்குகளிலும் இதுபோன்று நடத்தப்படுமா என்பது என்னுடைய சந்தேகம். அதனை பார்ப்போம்.

என்ன ஒரு பொருத்தம்! இரண்டு இஸ்லாமியர்களின் இறுதிச்சடங்கு ஒரே நாளில் நடைபெறுகிறது. இந்தியாவிற்காக கலாம் தான் செய்த சாதனைகள் மூலம், அனைவரையும் பெருமை அடைய செய்து உள்ளார்.

யாகூப் மேமன் தீவிரவாதிகளுக்கு உதவிசெய்து, மொத்த சமூதாயத்திற்கே அவமானத்தை ஏற்படுத்தி உள்ளார்" என்று திக்விஜய் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மும்பை தாக்குதல் குற்றவாளியை, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் ஒப்பிட்டு, திக்விஜய் சிங் கருத்து வெளியிட்டுள்ளதற்கு சமூக வலைதளங்களில் பதிவர்கள், கடும் எதிர்ப்புகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings