போராட்டத்தில் ஈடுபட்ட லாலு உள்ளிட்ட ஏராளமானோர் கைது

பீகார் மாநிலம் பாட்னாவில் மத்திய அரசை கண்டித்து ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியினர் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட வேண்டும், மத்தியில் இருந்து பா.ஜ.க. அரசை வெளியேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, பாட்னாவில் இன்று ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லாலு பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த முழு அடைப்பு போராட்டத்தால் பாட்னாவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

பல இடங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. சில ரெயில்சேவையும் ரத்து செய்யப்பட்டது.

பாட்னாவின் பல இடங்களில் குவிந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் டயர்களை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

முன்னதாக தனது வீட்டில் இருந்து தொண்டர்களுடன் புறப்பட்ட லாலு பிரசாத் யாதவை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த முழு அடைப்பு போராட்டத்தால் பல நீதிபதிகள் உயர்நீதிமன்றங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
Tags:
Privacy and cookie settings