ஐபோனை திருடும் போது செல்பி எடுத்து மாட்டிக் கொண்ட திருடன் !

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வெனிஸ் பகுதியில் திறந்து கிடந்த வீட்டில் நுழைந்து ஐபோன் திருடியவன், எதிர்பாராத விதமாக வீடியோ ஆப்பை தொட்டதில் அது அவனது நடவடிக்கைகளை பதிவு செய்தது.

ஐபோனை திருடும் போது செல்பி எடுத்து மாட்டிக் கொண்ட திருடன் !
திறந்து கிடந்த வீட்டின் உள்ளே சென்ற அவன் அங்கே மேசைமேல் வைக்கப்பட்டிருந்த ஐபோனை எடுத்துச் சென்றான். இதைத் தவிர வேறு எந்த பொருளும் அந்த வீட்டில் எடுக்கப்படவில்லை.

ஐபோனின் உரிமையாளர் அந்த வீடியோவை நவீன தொழில்நுட்பம் மூலம் எடுக்க முடிந்ததால் போலீசாருக்கு இதைப்பற்றி புகார் அளித்து வீடியோவையும் பகிர்ந்துள்ளார். 

போலீசார் ஐபோன் வீடியோவின் உதவியுடன் திருடனைக் கண்டுபிடிக்கும் நோக்கில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருடன் வீட்டுக்குள் நுழையும் போது ஒரு பெண் மற்றும் இரண்டு இளம் பெண்களும் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது ஆறுதல் செய்தி.
Tags:
Privacy and cookie settings