'முதல்வர் ஜெயலலிதா, தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மெட்ரே ரயில் கட்டண உயர்வுக்கு காரணமானவர்களை அழைத்துப் பேசி, கட்டணத்தை குறைக்க சொல்ல வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, 2006ல், என் தலைமையில், அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா தன் அறிக்கையில், ரயில் கட்டணத்தை நிர்ணயிக்க, தி.மு.க., ஆட்சியில் ஒப்பந்தம் கையெழுத்தானது என்ற பழியை,
என் மீது சுமத்த முயற்சித்துள்ளார். நான் ஏற்கனவே விடுத்த அறிக்கையில், மெட்ரோ ரயில் கட்டணத்தை, அ.தி.மு.க., ஆட்சியினர், அதிக அளவுக்கு விதித்திருப்பதாக கூறவில்லை.
இந்த திட்டத்தில், குறை ஏற்படாத வகையில், உடனடியாக தமிழக அரசும், மெட்ரோ நிறுவனமும் இணைந்து, பொதுமக்கள் போக்கு வரத்துக்காக செலவிடும் சக்தியை அறிந்து, அதற்கேற்ப மெட்ரோ ரயில் கட்டணங்களை குறைக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன்.
முதல்வர் பொறுப்பில் இருப்பவர், தன் பொறுப்பை உணர்ந்து, மெட்ரோ ரயிலில் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த கட்டண உயர்வுக்கு யார் காரணமோ, அவர்களை அழைத்துப் பேசி, அந்த கட்டணத்தை குறைக்க சொல்வது தான் முறை.
அதை விட்டு, எனக்கு அருகதை இல்லை என்றெல்லாம் அநாகரிகமாக அறிக்கை விடுவது, சரியில்லை. இது, 'அதிகமான கட்டணம்' என்ற பிரச்னைக்கு, ஜெயலலிதாவின் அறிக்கை தீர்வு கண்டு விடாது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.