தோனி இல்லாத ஐ.பி.எல்.-ஐ கற்பனை செய்வது கடினம்... கவாஸ்கர் !

1 minute read
ஐ.பி.எல். மேட்ச் பிக்சிங் வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப் பட்டுள்ளது.
தோனி இல்லாத ஐ.பி.எல்.-ஐ கற்பனை செய்வது கடினம்... கவாஸ்கர் !
இது குறித்து கவாஸ்கரிடம் கேட்டபோது, தோனி இல்லாத ஐ.பி.எல்.-ஐ கற்பனை செய்து பார்ப்பதுகூட கடினம் என்றார்.

தோனியில்லாத ஐ.பி.எல். எப்படி இருக்கும்? என்று கவாஸ்கரிடம் கேட்டதற்கு, தோனி இல்லாத ஐ.பி.எல்.-ஐ கற்பனை செய்வது கூட மிகவும் கடினமாக இருக்கும். எனினும், அவருக்கு 34 வயதாகிறது.

இன்னும் சில வருடங்களில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி விடுவார். எதுவாக இருந்தாலும், தோனி இல்லாத ஐ.பி.எல். போட்டியை நினைத்து பார்ப்பது மிகக்கடினம்’’ என்றார்.

மேலும், சென்னை, ராஜஸ்தான் வீரர்கள் கடும் அதிர்ச்சியில் இருப்பார்கள் என்பதை நான் அறிவேன். யாரோ செய்த தவறுக்கு அவர்கள் தனித்து விடப்பட்டிருக் கிறார்கள். 
இந்த வழக்கில் ஏற்கனவே மூன்று வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர். அப்போதிருந்தே இந்த இரு அணி வீரர்களும் இப்படி ஆகி விட்டதே என்று உணர்ந்திருக் கிறார்கள். 

அதே சமயம், மூன்று தலைசிறந்த நீதிபதிகள் கொடுத்த இந்த தீர்ப்பின் மீது நாம் கேள்வி எழுப்ப முடியாது என்றார்.
Tags:
Today | 19, March 2025
Privacy and cookie settings