காதலனை அப்பா என அழைக்க சொல்லி குழந்தைக்கு சூடு வைத்த தாய்!

திண்டுக்கல் மாவட்டம் சரகம் வையம்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுதா (வயது21). இவர்களுக்கு ஸ்ரீபிரியா (4) என்ற மகள் உள்ளார். கடந்த 1 ண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-னைவி இருவரும் பிரிந்து விட்டனர்.
சுதா அய்யலூர் அருகில் உள்ள வடகளம் பட்டியில் தனது தாய் சின்னபொண்ணுவுடன் வசித்து வந்தார். அந்த சமயத்தில் எரியோட்டை சேர்ந்த பாண்டி என்ற வாலி பருடன் சுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

சில மாதங்களுக்கு முன்பு சுதா தனது குழந்தையுடன் திடீரென மாயமாகி விட்டார். அவரை தாய் பல இடங்களில் தேடி பார்த்தார். அப்போது கள்ளக்காதலன் பாண்டியுடன் சுதா மாயமானது தெரிய வந்தது.

பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த சுதா பொங்கலுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு வந்தார். குழந்தையை தாயிடம் விட்டு விட்டு மீண்டும் மாயமானார்.

அப்போது குழந்தை ஸ்ரீபிரியாவின் உடலின் பல்வேறு இடங்களில் தீக்காயம் இருந்தது. அதிர்ச்சி அடைந்த சின்னபொண்ணு குழந்தையை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

கள்ளக் காதலனை அப்பா என அழைக்க சொல்லி சுதா தன் குழந்தைக்கு உடலில் சூடு போட்டது தெரிய வந்தது. இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த தனது குந்தையை பார்க்க சுதா வந்தார்.

அவரை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் சுதாவையும், கள்ளக்காதலனையும் பிடித்து வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாண்டி ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை விட்டு பிரிந்து சுதாவுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Tags:
Privacy and cookie settings