கந்து வட்டி கும்பல்: கேரளாவில் நால்வர் கைது

0 minute read
பாலக்காடு: தமிழகத்தை சேர்ந்த கந்து வட்டிக்காரர்கள், நால்வரை மன்னார்காடு போலீசார் கைது செய்தனர்.
 http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_74706232548.jpg
பாலக்காடு மாவட்டம் மன்னார்காட்டில் கந்து வட்டிக்கு பணத்தை அளிக்கும் கும்பலின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தோராபுரத்தில் நடத்திய சோதனையில், திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தயத்தை சேர்ந்த சிவசங்கரன், 32, செல்வராஜ், 37, சின்னகம்படியை சேர்ந்த சடைச்சாமி, 50, கரூர் முருகநாதபுரத்தை சேர்ந்த சபரீஷ், 24 ஆகிய கந்து வட்டிக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாயும், வாகன ஆர்.சி., புத்தகங்களும், கணக்கு புத்தகங்களும், பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களை, மன்னார்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், மாஜிஸ்திரேட் உத்தரவுபடி சிறையில் அடைத்தனர்.
Tags:
Today | 4, April 2025
Privacy and cookie settings