அபுல் கலாமும் அப்துல் கலாமும்!

உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய இருவர். ஒருவர் அபுல் கலாம் ஆசாத். இன்னொருவர் அப்துல் கலாம்.
ஐ.ஐ.டி.யை உருவாக்கி மறைந்தவர் அபுல் கலாம். ஐ.ஐ.எம்.மில் உரையாற்றி மறைந்தவர் அப்துல் கலாம்.

இருவருமே மிகச் சிறந்த கல்வியாளர்கள், கவிஞர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள், இறை நம்பிக்கை உடையவர்கள், இந்து-முஸ்லிம் ஒற்றுமையை இலக்காகக் கொண்டவர்கள்.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற அபுல் கலாம், உலகத் தரத்துக்கு இந்தியக் கல்வியை உயர்த்தினார். உலகமே அழைத்த போதும் விஞ்ஞானியான அப்துல் கலாம், இந்தியாவை வளர்க்கவே தம் அறிவைப் பயன்படுத்தினார்.

சாகித்ய அகாடமி, லலித கலா அகாடமி, நாடக அகாடமி, சங்கீத அகாடமி, யு.ஜி.சி, ஆவணக் காப்பகங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள்,

அறிவியல் தொழில் நுட்ப ஆய்வுக் கூடங்கள், ஐ.ஐ.டி.கள், மருத்துவக் கல்லூரிகள் என விடுதலை இந்தியாவின் பெருமை என எவற்றையெல்லாம் சொல்கிறோமோ, அவை அனைத்துக்கும் அடித்தளமிட்டவர் அபுல் கலாம்.

அறிவியல் கண்டுபிடிப்புகள், அணு ஆயுத சோதனைகள், நவீன செயற்கைக் கோள்கள் என இன்றைய இந்தியாவின் அடையாளங்கள் பலவற்றுக்கும் முகவரி தந்தவர் அப்துல் கலாம்.
Tags:
Privacy and cookie settings