மின்சார ரயில் சேவையில் தற்காலிக மாற்றம்!

1 minute read
சென்னை:சென்னை - கூடூர் வழித்தடத்தில் மேற்கொள்ளவுள்ள பொறியியல் பணிக்காக, ஜூலை 20, 22, 23, 29, 30, ஆகஸ்ட் 3, 10, 13, 17 ஆகிய தேதிகளில், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
 
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:

காலை, 8:50, 9:22, 10:25, 11:35 மணிக்கு மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - கும்மிடிப்பூண்டி இடையே, காலை, 9:30, 10:50, 11:20; பிற்பகல், 1:00, 1:35 மணிக்கு கும்மிடிப்பூண்டி - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் இடையே, காலை, 9:35 மணிக்கு, சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் ரயில்கள், பொன்னேரி - கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்படுகின்றன.

காலை, 9:55 மணிக்கு மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - சூலுார்பேட்டை இடையே மற்றும் காலை, 11:00 மணிக்கு சூலுார்பேட்டை - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் இடையே இயக்கப்படும் ரயில்கள், பொன்னேரி - சூலுார்பேட்டை இடையே ரத்து செய்யப்படுகின்றன.

கூடுர் - சென்னை சென்ட்ரல் பயணிகள் ரயில், கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுகிறது.

காலை, 9:50 மணிக்கு, சூலுார்பேட்டை - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் இடையிலான ரயில், 75 நிமிடங்கள் தாமதமாக, மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் சென்றுஅடையும்.

பிற்பகல், 2:05 மணிக்கு சென்னை சென்ட்ரல் - விஜயவாடா இடையே இயக்கப்படும் பினாக்னி எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரலில் இருந்து, 40 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.
Tags:
Privacy and cookie settings