பஸ் டிரைவர் கொலை.. காதலன் மூலம் தீர்த்து கட்டினேன்.. மனைவி !

திருச்சி உறையூர் வாத்துக்கார தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 32). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி விமலா (28). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 18–ந் தேதி மாத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பைபாஸ் சாலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் முருகானந்தம் பிணமாக கிடந்தார்.

இது தொடர்பாக விமலா உள்பட 11 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது விமலா முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் விமலாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இதை தொடர்ந்து விமலா போலீசாரிடம் கூறியதாவது:–

முருகானந்தம் தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து எனக்கு டார்ச்சர் கொடுத்தார். மேலும் இது குறித்து எனது கள்ளக்காதலனான சுப்பிரமணியபுரம் காந்தி தெருவை சேர்ந்த மாயவன் (29) என்பவரிடம் தெரிவித்தேன்.

எங்களது கள்ளத்தொடர்பை கண்டித்ததுடன் அதற்கு இடையூறாக இருந்ததால் அவர் தனது கூட்டாளியான நவீன் ராஜூவுடன் சேர்ந்து முருகானந்தத்தை கொலை செய்ததாக கூறினார்.

இதற்கிடையே நேற்று மாயவன் மாத்தூர் வி.ஏ.ஓ.விடம் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரித்த போது விமலாவும், நானும் சிறுவயது முதலே காதலித்தோம். அவரது விருப்பம் இல்லாமல் முருகானந்தத்துக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இதனால் விமலாவுக்கும், முருகானந்தத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் தான் குடிபோதையில் தொந்தரவு செய்வதால் முருகானந்தத்தை தீர்த்து கட்டி விடும்படி விமலா என்னிடம் கூறினார்.

இதையடுத்து நான் வெளிநாட்டுக்கு செல்வதால் பார்ட்டி வைப்பதாக கூறி கடந்த 17–ந் தேதி குண்டூருக்கு மோட்டார் சைக்கிளில் முருகானந்தத்தை அழைத்து சென்றேன்.

அப்போது என்னுடன் நவீன்ராஜூம் வந்தார். பின்னர் குண்டூர் பகுதியில் வைத்து மது அருந்தினோம் போதை தலைக்கேறியதும் கழுத்தை அறுத்து கொலை செய்து மாத்தூர் மின் வாரிய அலுவலகம் அருகே வீசினோம் என்று கூறினர்.

இதை தொடர்ந்து போலீசார் நேற்று மாயவனை புதுக்கோட்டை சிறையிலும், விமலாவை திருச்சி மத்திய சிறையிலும் அடைத்தனர். மேலும் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த நவீன்ராஜையும் நேற்றிரவு கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:
Privacy and cookie settings