பாலிவுட்டாக இருந்தாலும் தமிழ் சினிமாவாக இருந்தாலும் திருமணமான ஹீரோயின் களுக்கு பெரிய ஹீரோக்களுடன் வாய்ப்பு கிடைப்ப தில்லை என்ற நிலை திரையுலகில் உருவாகி யுள்ளது.
இருந்தாலும் 34 வயதாகும் கரீனா கபூர் திருமணம் ஆன பிறகும் பாலிவுட்டின் எல்லா கான்களுடனும் இப்போதும் நடித்து வருகிறார்.
நடிகர் சல்மான் கானுடன் நடித்த 'பஜ்ரங்கி பாய்ஜான்' வெற்றியை அடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கரீனா, 'குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக இருக்கிறது'
ஆனால், குழந்தை பெற்று கொள்வது குறித்து இதுவரை எந்த திட்டமும் இல்லை. அது குறித்து நான் தெளிவாக இருக்கிறேன். நடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு நான் தாயாக மாட்டேன்.
திருமணமான பின்பு நான் வணிக ரீதியிலான் படங்களையும், நல்ல பொழுது போக்கு படங்களையும் தேர்வு செய்து சமநிலையில் நடித்து வருகிறேன் என கூறினார்.
கரீனா கபூர் நடிகர் சயீப் அலி கானை காதலித்து கடந்த 2012-ஆம் ஆண்டு செய்து கொண்டார்.