சமக தலைவர் சரத்குமாரை வரவேற்க வந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால், தூத்துக்குடி விமான நிலையத்தில் பரபரப்பு பரபரப்பு ஏற்பட்டது.
சமத்துவ கட்சித் தலைவரும் தென்காசி தொகுதி எம்எல்ஏவுமான நடிகர் சரத்குமார் தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்காக கட்சியினர், ரசிகர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
அப்போது விமான நிலைய வளாகத்தில் நிறுத்தியிருந்த நெல்லை தொகுதி செயலாளர் அந்தோணி என்பவரின் ஸ்கார்ப்பியோ கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு எற்பட்டது.
தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இயந்திரக் கோளாறு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.