மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து
அவருக்கு 30-ந்தேதி தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து யாகூப் மேமன், மகாராஷ்டிர ஆளுநருக்கு ஒரு கருணை மனு அனுப்பி வைத்துள்ளார்.
அத்துடன், தனக்கான சட்டப்பூர்வ நிவாரணங்கள் முடிந்துவிடவில்லை என்பதால் தூக்கில் போடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டிலும் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட், நாளை விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளது.