கலாம் உடலுக்கு பிரணாப் முகர்ஜி, மோடி, தலைவர்கள் மலரஞ்சலி!

மறைந்த "மக்கள் ஜனாதிபதி" அப்துல் கலாம் அவர்களின் உடல் டெல்லி ராஜாஜிமார்க்கில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு வந்தடைந்தது.
 Leaders salute their final tribute to Kalam
இதனையடுத்து பல்வேறு தலைவர்களும், பிரமுகர்களும் அவருடைய உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மாரடைப்பால் காலமானர். மேகலாயாவில் கருத்தரங்கு ஒன்றில் பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

ராஜாஜிமார்க் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் அவர்களின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, தமிழக ஆளுநர் ரோசையா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
Leaders salute their final tribute to Kalam
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக மூத்த தலைவர் அமித் ஷா, உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், அதிமுக எம்.பிக்கள் தம்பிதுரை, மைத்ரேயன், நவநீத கிருஷ்ணன் உட்பட 47 பேர், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பாஜக மூத்த தலைவர் அத்வானி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கோவா ஆளுநர் மிரிதிலா சின்ஹா, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி டி.ராஜா ஆகியோரும் இறுதி மரியாதையை செலுத்தினார்கள். ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், 

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, தி.மு.க. எம்.பி.சிவா ஆகியோரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
Leaders salute their final tribute to Kalam
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைக் குடியரசுத் தலைவர் ஹமீன் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 

ஆகியோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்துல் கலாமின் இல்லத்தில் உள்ள இரங்கல் புத்தகத்தில், தன்னுடைய இரங்கலைப் பதிவு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.
Tags:
Privacy and cookie settings