கலாமுக்கு பாலிவுட் பிரபலங்களின் கடைசி சலாம் !

குடியரசு முன்னாள் தலைவர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (84) மாரடைப்பால் திங்கள் கிழமை மாலை உயிரிழந்தார். அவருக்கு பாலிவுட் பிரபலங்கள், ட்விட்டரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
 படம்: பிடிஐ

அமிதாப் பச்சன்:
 
ஒரு புத்திசாலியான மனிதர், குழந்தையைப் போன்ற அணுகுமுறை கொண்டவர். எளிமையான, எல்லோராலும் விரும்பப்பட்ட முன்னாள் குடியரசுத்தலைவர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.

ஷாரூக் கான்:

கலாம் அவர்களின் இறப்பைக் கேட்டவுடனே வருத்தமாக இருக்கின்றது. இறைவன் அல்லா, எல்லோருக்கும் அமைதியை அளிக்கட்டும். 

சல்மான் கான்:

எவ்வளவோ ஆசைப்பட்டும், கடைசிவரை கலாம் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறவில்லை. ஒரு விஞ்ஞானியாகவும், குடியரசுத்தலைவராகவும் இந்தியர்களுக்கு, 

தலைமுறைகள் தாண்டி உத்வேகம் அளித்திருக்கிறீர்கள். யாரையாவது பார்க்க வேண்டும் என்று உங்களின் இதயம் விரும்பினால் அதைத் தள்ளிப்போடாதீர்கள்.

கலாமைச் சந்திக்க எண்ணினேன். ஆனால் சந்திக்க முயற்சிக்கவில்லை. என்னுடைய இழப்பு இது. இந்தியாவின் இழப்பும் கூட. 

பிரியங்கா சோப்ரா:

ஒரே மனிதன் நல்லவராகவும், சிறந்தவராகவும் இருப்பது கடினம். ஆனால் கலாம் அவை இரண்டின் மறுவடிவமாக இருந்தார். இந்தியாவுக்கான பேரிழப்பு இது. அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். 

அனுபம் கெர்:

உங்களின் அறிவு, எடுத்துக்காட்டாக வாழ்ந்த வாழ்க்கை, பெருந்தன்மை, தேசப்பற்று மற்றும் உங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி. 

அபிஷேக் பச்சன்:

நம் எல்லோரின் மாபெரும் இழப்பு, கலாம் அவர்களின் மறைவு. 

ஷ்ரேயா கோஷல்:

லட்சக்கணக்கான மக்களைத் தனது அறிவாற்றல் மற்றும் பார்வையால் ஈர்த்தவர் கலாம். அறிவே பலம் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் நீங்கள். இந்த நாடும், நாங்களும் என்றும் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறோம். 

நேகா துபியா:

ஒரு படைப் பாளியாக, ஆசிரியராக, விஞ்ஞா னியாக மற்றும் தேசத்தின் சிறந்த குடியரசுத் தலைவராக இருந்தவர் கலாம்.

சுஷ்மிதா சென்: 

என்ன ஒரு போற்ற த்தக்க வாழ்வு கலாம் அவர்களு டையது! தெய்வீக மான அவரின் வாழ்க்கையை வணங்குவோம். 

ஏ.ஆர்.ரஹ்மான்:

நீங்கள் குடியரசுத் தலைவராகி, இந்திய மக்களின் மனதில் 'நம்பிக்கை' என்னும் வார்த் தைக்கு புது அர்த்த த்தையே அளித்தீர்கள்.

இன்று, இளந்தலை முறைகளின் முன் மாதிரி யாகத் திகழ்ந்த பெருந்தலைவர் ஒருவரை இழந்து நிற்கிறோம். கடவுள் உங்களுக்கு சொர்க்கத்தை அளிக் கட்டும்.
Tags:
Privacy and cookie settings