ஆயுள் கைதிகளை விடுவிக்க அரசுக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு

ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேநேரம், ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 432 மற்றும் 433-ன் கீழ் ஆயுள் தண்டனை குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யும் மாநில அரசு அதிகாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலையாளிகள் 7 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதையடுத்து, அவர்களை விடுதலை செய்ய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு உத்தரவு அளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில்தான் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலை தொடர்பான விசாரணை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings