கரகாட்டக் காரன் படத்தின் ரிமேக்கில் நடிக்க வேண்டும் என்பது லட்சுமி மேனனின் விருப்பம். ஆனால், ஜெகன் மோகினி டைப் படத்தில் நடிக்கும் யோகம்தான் அவருக்கு. ஆம், லட்சுமி மேனனும் பேயாக நடிக்கிறார்.
நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய சக்தி சுந்தர் ராஜன் அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்குகிறார். பேய், ஃபேண்டஸி எல்லாம் கலந்த ஒரு அவியல் ஜானர் இது.
இதில் லட்சுமி மேனன் பேயாக வருகிறார். படத்தில் அவர்தான் நாயகி என்பது உதிரி தகவல். கதையும், காட்சியும் மட்டும் முதுகுத் தண்டை ஜில்லிட வைத்தால் போதாது
கதை நடக்கும் இடமும் ஜில்லென்று இருக்க வேண்டும் என நினைத்தாரா தெரியவில்லை, படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் தொடங் குகிறது.
அதன் பிறகு ஹைதராபாத், சென்னை என்று இடம் மாறு கிறார்கள். பேயாக நடிக்க வில்லை என்ற குறை லட்சுமி மேனனுக்கு இந்தப் படத்தோடு தீர்ந்தது.