சந்தேகத்தில் கைது செய்த இந்தியரை விடுவித்தது சீனா

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட இந்தியர், ராஜிவ் மோகன் குல்ஷ்ரஸ்தாவை, சீனா நேற்று விடுவித்தது.
தென்ஆப்ரிக்காவை சேர்ந்த தொண்டு நிறுவனம் சார்பில், கடந்த வாரம், சீனாவின் ஆட்சிக்கு உட்பட்ட மங்கோலியாவிற்கு, 20 சுற்றுலா பயணிகள் சென்றனர். அவர்களில் சிலர், ஓட்டல் அறையில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின், 'வீடியோ' வை பார்த்ததாக கூறப்படுகிறது.

அதனால் மொத்த குழுவையும் கைது செய்த சீன போலீஸ், விசாரணைக்கு பிறகு, இங்கிலாந்தை சேர்ந்த, ஆறு பேரை மட்டும் விடுவித்தது.

இதையடுத்து, இந்திய துாதரகம் மேற்கொண்ட தீவிர முயற்சியால், நேற்று, ராஜிவ் மோகன் குல்ஷ்ரஸ்தா விடுவிக்கப்பட்டார்.

அவரை, பீஜிங் விமான நிலையத்தில் இருந்து, இந்திய துாதரக அதிகாரிகள் டில்லிக்கு வழியனுப்பி வைத்தனர். அவருடன் பிடித்து வைக்கப்பட்டிருந்த, எஞ்சிய, 13 பேரையும் சீனா விடுவித்துள்ளது.
Tags:
Privacy and cookie settings