வலங்கைமான் பகுதியில் குறுவை தொகுப்பு திட்டத்தில் கட்டணம் இன்றி நடவு பணி மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும், இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் வேளாண்மை உதவி இயக்குனர் தேவேந்திரன் கூறினார்.
குறுவை தொகுப்பு திட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வேளாண்மை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவேந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:–
தற்போது குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு உதவி திட்டத்தை தமிழக அரசு அறிவித்து உள்ளது. இத்திட்டத்தில் நடவு பணிகள் எந்திரம் மூலம் கட்டணம் இன்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோடை நெல் அறுவடையை முடித்து குறுவை சாகுபடிக்கு தயாராகி வரும் விவசாயிகள் தங்கள் வயல்களில் கட்டணம் இன்றி நடவு பணி மேற்கொள்ளலாம். இதுதொடர்பான விவரங்களுக்கு அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டும்.
மண்வளம் மேம்பாடு
இதேபோல் மண் வளத்தை மேம்படுத்துவதற்கு விலையில்லா ஜிப்சம் உரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.