விவசாயிகள் 6 மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் 56 அங்குல மார்பை 5.6 அங்குலமாக குறைப்பார்களே தவிர, ஓர் அங்குல நிலத்தைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்று நிலச் சட்டம் குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.
நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடி 56 அங்குல மார்பு பற்றி கூறியதை மேற்கோள் காட்டாமல் சூசகமாகத் தாக்கியுள்ளார் ராகுல் காந்தி.
ஜெய்பூரில் கட்சித் தொண்டர்களிடையே பேசிய போது ராகுல் காந்தி இவ்வாறு கூறினார்.
அடுத்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் நிலச்சட்டத்தை நடைமுறைப்படுத்த பாஜக அரசு தீவிரம் காட்டும் என்பதை மனதில் நிறுத்தி ராகுல் காந்தி இவ்வாறு பேசியுள்ளார்.
"எதிர்கட்சியினருக்கு உதவிபுரியும் ஒரு அரசு முதன்முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு அரசு உதவி வருகிறது. விவசாயிகள் விவகாரத்தில் 3 முறை அவசரச்சட்டம் கொண்டு வந்தனர்.&
நிலச்சட்டம் நிறைவேற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். ஒரு அங்குல நிலம் கூட அளிக்கப்படமாட்டாது.
இந்த 56 அங்குல மார்பை 5.6 அங்குலமாக மாறும். 5.6 அங்குலமாக மாற்றப்போவது காங்கிரஸ் கட்சி, நாட்டின் மக்கள், விவசாயிகள், மற்றும் தொழிலாளர்கள், இதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்றார்.
அதே போல் லலித் மோடி-வசுந்தரா ராஜே விவகாரம் குறித்து பேசிய ராகுல், “இந்த அரசின் (ராஜஸ்தான்) அரசின் ரிமோட் கண்ட்ரோல் லண்டனில் உள்ளது. அவர் அங்கு பொத்தானை அழுத்தினால் இவர் (ராஜே) இங்கு குதிப்பார்.
இந்திய சட்டத்தை மீறியுள்ளார் அவர் (ராஜே), கருப்புப் பணம் உருவாக்கிய ஒருவருக்கு, ஊழல்வாதி ஒருவருக்கு உதவி புரிந்துள்ளார்.
இங்கு நடப்பது வசுந்தரா அரசு அல்ல, லலித் மோடி அரசு. ராஜஸ்தானில் உள்ள அனைவருக்கும் இது தெரியும்” என்றார் ராகுல் காந்தி.