உயர் ரக செல்போன்கள் மூலம் தங்களை தாங்களே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ‘செல்பி’ மோகம், உலகம் முழுவதும் அனைத்து தரப்பினரிடமும் காணப்படுகிறது.
இவ்வாறு ‘செல்பி’ எடுப்பவர்கள், அவற்றை ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ போன்ற சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள்.
இதில் சிலர் ஆபாசமாகவும், அரை நிர்வாணமாகவும் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துவதும் உண்டு. இது போன்ற ஆபாச ‘செல்பி’ படங்கள் வெளியிடுவது தாய்லாந்தில் அதிகரித்துள்ளது.
இவ்வாறு ஆபாச செல்பி படங்களை வெளியிடுபவர்களுக்கு, தாய்லாந்து அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி தாய்லாந்து பெண்கள் தங்கள் முகத்தை மறைத்தபடி, கீழ் மார்பு தெரியுமாறு செல்பி புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்து உள்ளது.
இவ்வாறு புகைப்படம் எடுப்பவர்களுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அந்த நாட்டு கலாசாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆனால் முகம் தெரியாத வகையில் இந்த புகைப்படம் எடுப்பதால், சம்பந்தப்பட்டவரை எப்படி கண்டுபிடிக்க முடியும்? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சக செய்தி தொடர்பாளர்,
‘இது தொடர்பாக மக்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்க முடியும்’ என்று கூறினார்.