பீகார் செல்லும் பிரதமர் மோடியை, மனித வெடிகுண்டு மூலம் கொல்ல சதி நடப்பதாக மத்திய புலனாய்வு பிரிவு (ஐ.பி.,) எச்சரித்துள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை பீகாரில் உள்ள
பாட்னா மற்றும் முசாபர்பூர் ஆகிய ஊர்களுக்கு பிரதமர் செல்கிறார். பீகாரில் நடக்க சட்ட.சபை தேர்தலுக்கான பிரசாரத்தை அங்கு துவக்குகிறார்.
இந்த கூட்டத்தில்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்வை ஸ்ரீபெரும்பத்தூரில் மனிதவெடிகுண்டு மூலம் கொலை செய்ததை போன்று பிரதமர் மோடியை கொலை செய்ய பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அந்த எச்சரிக்கையில் கூறப்பட் டுள்ளது.
நன்கு பயிற்சி பெற்ற பெண் மாவோயிஸ்ட் மனிதகுண்டாக மாறி இந்த தாக்குதலை நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பிரதமரின் பயணம் மற்றும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநில அரசும் எச்சரிக்கப்பட்டு, அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.
செய்தியாளர், போலீஸ் அதிகாரி, எலக்ட்ரீசியன், தொழிலாளர் வேஷத்தில் இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
2013ல், அப்போதைய பிரதமர் வேட்பாளராக பா.ஜ., கட்சியால் அறிவிக்கப்பட்ட மோடி, பாட்னாவில் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பாட்னாவில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன.
அதுபோன்ற சம்பவம் இப்போது நடந்து விடக்கூடாது என்பதில் அதிகாரிகள் கவனமாக இருக்கின்றனர். அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.