மீண்டும் இணையும் 'ரோமியோ ஜூலியட்' குழு: தயாரிக்கும் பிரபுதேவா!

ஜெயம் ரவி மற்றும் 'ரோமியோ ஜூலியட்' இயக்குநர் லஷ்மண மீண்டும் இணையும் படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் பிரபுதேவா. 

 

ஜெயம் ரவி, ஹன்சிகா, பூனம் பாஜ்வா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ரோமியோ ஜூலியட்'. இமான் இசையமைத்திருந்த இப்படத்தை லஷ்மண் இயக்கி இருந்தார். நந்தகோபால் தயாரித்திருந்தார். இளைஞர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. 

தற்போது இப்படக்குழு மீண்டும் இணைந்து படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார்கள். 'ரோமியோ ஜூலியட்' படத்தைப் பார்த்து பாராட்டிய பிரபுதேவா, லஷ்மண் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே அவரே தயாரிக்க முடிவு செய்திருக்கிறார். 

இரண்டு நாயகர்கள் கொண்ட கதையில், ஒரு நாயகனாக ஜெயம் ரவி நடிக்கிறார். இன்னொரு நாயகனாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

ஆக்‌ஷன், காமெடி, த்ரில்லர் என அனைத்து கலந்த படமாகவும், பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவம் கொடுக்கக் கூடிய படமாகவும் இருக்கும் என்கிறது படக்குழு. 
Tags:
Privacy and cookie settings