மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4.15 மணிக்கு தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், அவரது ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ''எம்.எஸ்.வி. ஆன்மாவை எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிப்பாராக.
எங்கள் அன்புக்குரிய இனிமையான மேதையை இழந்துவிட்டேன். கடந்த 40 ஆண்டுகளில், தமிழ் மற்றும் வண்ணமயமான இசையின் மையப்பகுதிக்கு நம்மை அழைத்து சென்றவர் எம்.எஸ்.வி. தனது மெல்லிசையால் திரைப்பட ரசிகர்களை கட்டிப்போட்டவர்" என்று இரங்கல் தெரிவித்து உள்ளார்.