நோபல் பரிசு வென்ற மலாலாவை கேரளாவுக்கு அழைத்த மாணவர்கள்

பாகிஸ்தானைச் சேர்ந்த நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாயின் துணிச்சலான நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் குழு, அவருக்கு ஓணம் பண்டிகைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கேரளாவின் கூனமூச்சி என்ற குக்கிராமத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 1-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியர்கள், 18 வயதான மலாலாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இவர்கள் அனைவரும் ‘ஷ்ரேயாஸ் வித்யார்த்தி கூட்டயமா’ என்ற மாணவர் அமைப்பு மூலமாக ஒன்றிணைந்தவர்கள்.

இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மலாலாவின் நடவடிக்கைகளை குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வகையில் பல மேடை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். மேலும் கடந்த 20-ம்தேதி மலாலாவின் பிறந்த நாளை புத்தக வடிவில் உள்ள கேக்கை வெட்டி கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சிகளின்போது எடுக்கப்பட்ட படங்களையும் இணைத்து அவர்கள் மலாலாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வருகிற ஆகஸ்ட் 27 மற்றும் 28-ம் தேதிகளில் கொண்டாடப்படவுள்ள, கேரளாவின் பிரம்மாண்ட பண்டிகையான ஓணம் பண்டிகைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings