பெண்ணின் தலையில் பாய்ந்த கத்தரிக்கோல் - அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

1 minute read
நெல்லையில் பெண்ணின் தலையில் பாய்ந்த கத்தரிக்கோலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்தவர் பால்தாய். பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் இரவில் பீடி சுற்றி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
 
அப்போது குடும்பத்தில் ஏற்பட்ட சிறு சண்டையில் அவர் மீது கத்தரிக்கோல் வீசப்பட்டது. மின்னல் வேகததில் பாய்ந்த வந்த கத்தரிக்கோல் அவர் தலை மீது ஈட்டி போல் பாய்ந்தது. அவர் அலறி துடித்தார்.

உடனே தலையில் உள்ள கத்தரிக்கோலை பிடுங்கி எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. வேகமாக வீசபபட்டதால் கத்தரிகோல் மண்டை ஓட்டில் வலுவாக பதிந்த நின்றது.

இதனால் வலி பொறுக்க முடியாத பால்தாய் சிறுது நேரத்தில் மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை உடனடியாக தென்காசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் முடியாது என்றும் நெல்லைக்கு கொண்டு செல்லவும் அறிவுறுத்தினர். அதன் பேரில் அவர் ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

பின்னர் பால்தாய்க்கு அறுவை சிகிச்சை செய்து கத்தரிக்கோலை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் பால்தாய் தலையில் இருந்த கத்தரிகோலை அகற்றினர். சுமார் பல மணி நேரத்திற்கு பிறகு அவருக்கு நினைவு திரும்பியது.

இதுகுறித்து நெல்லையில் நிருபர்களிடம் மருத்துவர்கள் கூறுகையில், "பால்தாயின் தலையில் மண்டை ஓடு மற்றும் மூளையை சுற்றியுள்ள சதையையும் தாண்டி 2 சென்டி மீட்டர் ஆழம் வரை சென்று விட்டது.

இதை தொடர்ந்து நரம்பியல் துறை பேராசிரியர் ஜோயல் தனபாண்டியன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சுமார் 1 மணி நேரம் போராடி கத்தரிகோலை எடுத்தனர். மூளை அருகே சிறிய துளை போட்டு அதன் பின்னர்தான் கத்தரிகோலை எடுக்க முடிந்தது.

இப்போது அவர் நல்ல நிலையில் இருக்கிறார். அவரை தொடர்ந்து இரண்டு மாதங்கள் கண்காணிப்போம்" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings